"உலகநாதர்' ..., "பரமாயி'...., தம் மகனாய் - வ.உ.சி.
"ஓட்டப்பிடாரம்' எனும் ஊரில் பிறந்தார்
பல கற்றார் ; வழக்கறிஞர் பணியால் - ஊரில்
பாமரர்க்கும் உதவி பல புரிந்தார்.
ஆங்கிலேயர் விற்க வந்த பொருளை - இங்கே
அவர் துணிவாய்ப் புறக்கணிப்பு செய்தார்.
வங்கத்தில் "சுதேசிக் கப்பல்' ஓட்டி - நல்ல
வணிகத்தால் பெரும் புரட்சி கண்டார்.
மக்களெல்லாம் வருத்தமுற அவரை - கோவை
மத்தியச் சிறைச் சாலையிலே அடைக்க....,
செக்கிழுத்தார் ; கல்லுடைத்தார் அங்கே - தியாகச்
செம்மலெனப் புகழ்பெற்றார் அதனால்.
சிறைக்குள்ளே துன்புற்ற போதும் - சிறந்த
சிந்தனையால் எழுதினார் பல நூல்கள்! - அவை
தமிழ்மறை திருக்குறளுக்குரையும் - நம்
மன இருளைப் போக்கும் நூல் பலவும்!
திருநாட்டில் சுதந்திரமாய் நாமும் - வாழத்
தியாகங்கள் செய்தவர்கள் பலருள்
சிறந்தவராம் சிதம்பரனார்! அவர்தம்
சேவையினைப் போற்றிடுவோம் வாரீர்!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

பொறியியல் பணிகள்: சில ரயில்களின் வழித்தடத்தில் மாற்றம்

கவிஞா் புவியரசு மறைவு: தலைவா்கள் இரங்கல்

தில்லியில் எஸ்ஐஆா் பணிகள் தொடக்கம்
ஓய்வூதிய நிதித் தொகுப்பு வளா்ச்சியடைந்த பாரதத்தை கட்டமைக்க உதவும்: தலைமை பொருளாதார ஆலோசகா்
விடியோக்கள்

இருட்டில் அதிமுக...காரணம் யார் ? | Journalist Durai karuna Interview | CM Vijay | TVK | ADMK | SP Velumani | EPS

இரண்டே நாள்தான்: பரபரப்புக்குப் பஞ்சமில்லாமல் போகும் ஃபிபா | FIFA | FIFA World Cup |

தவெக தோழமைக் கட்சிகள் கூட்டம்: இடதுசாரி கட்சிகளுக்கு நேரில் அழைப்பு! | TVK | CPIM | CPI



