எ.வ. வேலுவுக்கு எதிரான தமிழக அரசின் மேல்முறையீடு தள்ளுபடி! - உச்ச நீதிமன்றம் முதல்வர் விஜய்யுடன் மார்க்சிஸ்ட் கம்யூ. மாநிலச் செயலாளர் பெ. சண்முகம் சந்திப்பு! நெருக்கடி நிலையில் கலைஞருக்கு ஆதரவாக நின்றவர்! காமராஜருக்கு ஸ்டாலின் புகழாரம்! கல்வித்துறையை முழுக் கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவர மோடி அரசு துடிக்கிறது! மாணிக்கம் தாகூர் ஃபிஃபா உலகக்கோப்பை: இறுதிப்போட்டிக்குள் நுழைந்தது ஸ்பெயின் மும்மொழிக் கொள்கைக்கு எதிரான மனுக்கள்: மத்திய அரசு, சிபிஎஸ்இ பதிலளிக்க உச்சநீதிமன்றம் உத்தரவு இந்தியா - பிரிட்டன் வா்த்தக ஒப்பந்தம் இன்றுமுதல் அமல்! யாருக்கு என்ன பலன்? தென் சீனக் கடலை சீனா உரிமை கோர முடியாது: தீா்ப்பாயத்தின் முடிவுக்கு இந்தியா வரவேற்புபாபநாசம் அருகே கோயிலில் எரிந்த விளக்கை அணைத்து எண்ணெய் குடித்த கரடி 2031-க்குள் 20,000 பொது மின்வாகன சாா்ஜிங் நிலையங்கள்: தமிழ்நாடு மின்வாரியம் 16 ஆண்டுகளாகப் பரிதவிக்கும் 11,773 பகுதிநேர ஆசிரியர்கள்!
/

நம்பிக்கை!

இங்கிலாந்து நாட்டில் ஒரு கிராமம். அந்தக் கிராமத்தில் ஜான் என்று விவசாயி ஒருவர் இருந்தார். அவரிடம் ஒரு குதிரை இருந்தது.  பீட்டர்சன் என்பவர் அவரைப் பார்க்க வெகு அவசரமாக வந்தார். 

News image
Updated On :12 செப்டம்பர் 2020, 6:00 am IST


இங்கிலாந்து நாட்டில் ஒரு கிராமம். அந்தக் கிராமத்தில் ஜான் என்று விவசாயி ஒருவர் இருந்தார். அவரிடம் ஒரு குதிரை இருந்தது. பீட்டர்சன் என்பவர் அவரைப் பார்க்க வெகு அவசரமாக வந்தார்.

""என்ன விஷயம்?'' என்று கேட்டார் ஜான்.

""என் பெயர் பீட்டர்சன்....நான் லண்டனிலிருந்து வருகிறேன்..... நீங்க எனக்கு ஓர் உதவி செய்யணும்...''

""சொல்லுங்க....''

""இது எனக்குப் பழக்கமில்லாத பாதை. நான் வந்த கார் கண்ட்ரோல் இல்லாமல் ஓர் பள்ளத்தில் சிக்கிக் கொண்டது. காரை வெளியே எடுக்கணும்.... உங்க கிட்டே ஒரு குதிரை இருக்குன்னு சொன்னாங்க.... அதைக் கொண்டு காரை வெளியே எடுத்துடலாம்னு சொன்னாங்க.... அதான் உங்ககிட்டே உதவி கேட்கலாம்னு.....''
""ரொம்பப் பெரிய காரா?''

""இல்லை.... சின்னக் கார்தான்...''

ஜான் கயிறு உட்பட சில உபகரணங்களை எடுத்துக்கொண்டார். குதிரையின் கட்டை அவிழ்த்து, அதையும் நடத்தியபடி பீட்டர்சனுடன் நடந்து சென்றார்.

இருவரும் கார் பள்ளத்திற்கு அருகே சென்றனர். காரை வெளியே எடுக்கும் முயற்சியில் குதிரைக்குக் காயம் ஏற்படலாம் என்று ஜானுக்குத் தோன்றியது. ஜான் ஒரு கயிற்றைக் காரில் கட்டி குதிரையோடு பிணைத்தார்.

பிறகு, ""எங்கடா, "கேஸி!'.... இழு பார்ப்போம்!'' என்று சத்தமாகக் குரல் கொடுத்தார். குதிரை அசையாமல் அப்படியே நின்று கொண்டிருந்தது.

""பெய்லி!..... இழுடா ராஜா!'' என்று மறுபடியும் உரத்த குரலில் சொன்னார் ஜான்.
குதிரை ஓர் அங்குலம் கூட நகரவில்லை. பீட்டர்சனுக்குக் கவலையாகிவிட்டது!
ஜான் குதிரையைப் பார்த்து, ""என் செல்லம்,... பட்டீ!..... நீயும் சேர்ந்து இழுடா!'' என்றார்.

அவ்வளவுதான்!.... குதிரை கயிற்றை இழுக்க ஆரம்பித்தது! அடுத்த ஐந்தாவது நிமிடம் கார் பள்ளத்திலிருந்து மேலே ஏறிவிட்டது!

பீட்டர்சன், விவசாயி ஜானுக்கு நன்றி கூறினார். பிறகு ஜானிடம், ""ஐயா,.... நீங்க ஏன் உங்க குதிரையை விதவிதமான பெயரில் கூப்பிட்டீங்க?....அதுதான் எனக்குப் புரியவில்லை....''

""அதுவா?.... என் செல்லக் குதிரை பட்டீக்குக் கண் தெரியாது!.... அதான் அது கூட இன்னும் மூணு குதிரைகள் இருக்கிற மாதிரி நம்ப வெச்சேன்.... அதுக்கும் நம்பிக்கை வந்துடுச்சு!.... காரை வெளியே இழுத்துடுச்சு!...''

பீட்டர்சன் சிரித்துக்கொண்டே அவருக்கு மறுபடியும் நன்றி கூறிவிட்டுக் கிளம்பினார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.