தவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமிகடலோர தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புரமலான்: கன்னியாகுமரிக்கு இன்று சிறப்பு ரயில்அண்ணா பல்கலை. முனைவா் பட்டங்களுக்கு விண்ணப்பிக்க மாா்ச் 28 கடைசி நாள்ஈரான் விவகாரத்தில் ஜப்பான் ஒத்துழைக்க வேண்டும் : டிரம்ப் அழைப்புவேளச்சேரி-பரங்கிமலை இடையே ரயிலில் பயணிப்போா் அதிகரிப்பு : கூடுதல் ரயில்கள் இயக்க முடிவு
/

வள்ளுவத்தைக் கற்கட்டும்!

கார்மேகம் சூழ்ந்திங்கு கனமழையைப் பொழியட்டும்!மழையாலே பல மரங்கள் 

News image
Updated On :18 செப்டம்பர் 2020, 5:25 pm

இரா.பரஞ்சோதி

கார்மேகம் சூழ்ந்திங்கு 
கனமழையைப் பொழியட்டும்!
மழையாலே பல மரங்கள் 
மண் மீது வளரட்டும்! 

பள்ளத்தில் நீர் சேர்ந்து 
பலருக்கும் உதவட்டும்!
நிலமெல்லாம் நெற்பயிர்கள் 
நிறைவாக வளரட்டும்!

பள்ளிக்குப் பிள்ளைகள் 
நனையாமல் போகட்டும்!
படிப்புடனே விளையாட்டைப் 
பாங்காகக்  கற்கட்டும்!

பிழையின்றி எழுதுகின்ற 
பயிற்சியுமே கிடைக்கட்டும்!
வாழ்க்கை நெறி அறிந்துணர 
வள்ளுவத்தைக் கற்கட்டும்!

கற்றவர்கள் அளவின்றிக் 
கண்முன்னே பெருகட்டும்!
எற்றைக்கும் உண்மை மட்டும் 
எல்லோரும் பேசட்டும்!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.