நினைவுச் சுடர்!: கருணைக் கரங்கள்!
அமெரிக்காவில் உள் நாட்டுப் போர் நடந்து கொண்டிருந்த சமயம் அது. அப்போது நாட்டின் ஜனாதிபதியாக இருந்த ஆபிரஹாம் லிங்கன், போரில் காயமுற்ற வீரர்களைப் பார்த்து ஆறுதல் கூறிக் கொண்டிருந்தார்.


அமெரிக்காவில் உள் நாட்டுப் போர் நடந்து கொண்டிருந்த சமயம் அது. அப்போது நாட்டின் ஜனாதிபதியாக இருந்த ஆபிரஹாம் லிங்கன், போரில் காயமுற்ற வீரர்களைப் பார்த்து ஆறுதல் கூறிக் கொண்டிருந்தார். அப்போது ஒரு போர் வீரர் இறக்கும் தறுவாயில் இருந்தார். அந்த போர்வீரர், லிங்கனை யாரென்று தெரியாமல் அவரிடம், ""என் தாய்க்கு ஒரு கடிதம் எழுத வேண்டும்.... நீங்கள் எனக்கு உதவுவீர்களா?'' என்று கேட்டார்.
லிங்கன் அன்புடன் அதற்குச் சம்மதித்து வீரர் கூறக்கூற கடிதத்தை எழுதினார். இறுதியில் கையெழுத்துப் போடும் இடத்தில்,.... உங்கள் மகனுக்காக எழுதியவர்.... ஆபிரஹாம் லிங்கன் .... என்று கடிதத்தை முடித்தார். அதை அந்தப் போர்வீரனிடம் சரி பார்க்கக் கொடுத்தார். வீரரோ கடிதத்தைப் பார்த்து ஆச்சரியத்தோடு, ""நீங்கள் உண்மையில் ஜனாதிபதியா?'' என்று கேட்டார்.
""ஆமாம்..... நான் உங்களுக்கு வேறு ஏதேனும் உதவி செய்ய வேண்டுமா?''
""என் கையைப் பிடித்தபடி என் அருகில் உட்காருவீர்களா?.... என் கடைசி நிமிடங்களை நான் நிம்மதியாகக் கழிக்க அது உதவியாக இருக்கும்....'' என்று கூறினார் அந்தச் சிப்பாய்.
அந்த மருத்துவ முகாமில் அந்த உயரமான ஜனாதிபதி அந்த வீரர் கைகளைப் பிடித்துக்கொண்டு அமர்ந்திருந்தார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...