தங்கம் விலை சவரனுக்கு ரூ. 2,720 உயர்வு!டிரம்ப் வரி குறைப்பு எதிரொலி! சென்செக்ஸ் 2,600 புள்ளிகள் உயர்வு!விஜய்யின் கடலூர் பிரசாரத்துக்கு அனுமதி!கச்சா எண்ணெய் விலை அதிரடி சரிவு!அதிமுக ஆட்சி அமைந்ததும் தமிழ்நாட்டில் சாதிவாரிகணக்கெடுப்பு நடத்தப்படும்: எடப்பாடி பழனிசாமிதிமுக தேய்ந்து வருகிறது; முன்னாள் அதிமுகவினரே திமுக வேட்பாளர்கள் - இபிஎஸ் விமர்சனம்48 மணிநேரத்துக்கு வெளியே செல்ல வேண்டாம்: ஈரானில் உள்ள இந்தியர்களுக்கு தூதரகம் அறிவுறுத்தல்!மகளிருக்கு ஒவ்வொரு மாதமும் ரூ. 2,000! மேற்கு வங்கத்தில் காங்கிரஸ் தேர்தல் அறிக்கை வெளியீடுஒரு முழு நாகரிகமே அழியப்போகிறது, மீண்டும் திரும்பாது : ஈரானுக்கு டிரம்ப் இறுதி எச்சரிக்கைஈரான் கார்க் தீவில் அமெரிக்கா மீண்டும் தாக்குதல்
/

அங்கிள் ஆன்டெனா

பூமியில் தோன்றிய உயிரினங்களில், இறக்கைகள் முளைத்து, முதல் முதலில் ஆகாயத்தில் பறந்த பறவை எது என்று சொல்ல முடியுமா?

News image
Updated On :24 ஏப்ரல் 2021, 12:30 am

கேள்வி: பூமியில் தோன்றிய உயிரினங்களில், இறக்கைகள் முளைத்து, முதல் முதலில் ஆகாயத்தில் பறந்த பறவை எது என்று சொல்ல முடியுமா?

பதில்: நூற்று நாற்பது மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பிருந்த "மிஸோசாயிக்'  காலத்தில்தான் ஊர்வனவற்றிலிருந்து பரிணாம வளர்ச்சி பெற்றுப் பறவைகள் தோன்றியதாகக் கூறுகிறார்கள்.

இந்த நவீன காலத்தில் 9000-க்கும் மேற்பட்ட பறவையினங்கள் பூமியெங்கிலும் வாழ்ந்து வருவதாகக் கணக்கிட்டிருக்கிறார்கள். இன்னும் கணக்கெடுக்கப்படாத பறவையினங்களும் இருப்பதற்கு வாய்ப்புகள் அதிகம் உள்ளன என்றும் கூறுகிறார்கள்.

அன்றைய ஊர்வனவற்றிற்கும் இன்றைய பறவையினங்களுக்கும் இடையிலான ஓர் உயிரினம்தான் பூமியில் தோன்றிய முதல் பறவை. ஆனால், அதையும் நிச்சயமாகப் பறவை என்று சொல்லிவிட முடியாது. ஆனால் இந்த உயிரினத்துக்கான பல ஆதாரங்கள் புதை படிமங்கள் வடிவாகக் கிடைத்திருக்கின்றன. இவற்றுக்கு ஊர்வன போன்ற வால்களும் பறவைகளைப் போன்ற சிறகுகளும் இருப்பது தெரிய வந்திருக்கிறது. மேலும் இதற்குப் பற்கள் கூட இருப்பதும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. ஆனால் இது என்ன பறவையாக இருக்கும் என்பது இதுவரைத் தெளிவுபடுத்தப்படவில்லை.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.