சுவீடன் நாடு மின்சார உற்பத்தியைப் பெருக்க நினைத்தபோது ஒரு யோசனை பிறந்தது. அதுதான் குப்பைகளிலிருந்து மின்சாரம் தயாரிப்பது! மிகவும் வெற்றிகரமாக இந்தச் சாதனையை நிகழ்த்தியுள்ளது ஸ்வீடன்!
உள்நாட்டுக் குப்பைகளை மறு சுழற்சி செய்து நாட்டின் பெருமளவு மின்சாரத் தேவையைப் பூர்த்தி செய்துள்ளது! (ஸ்வீடனுக்கு ஒரு சபாஷ்!) அது மட்டுமல்ல! மின்சாரத் தயாரிப்பிற்காக தன் நாட்டுக் குப்பைகள் முழுவதுமாகத் தீர்ந்து விடுமோ என்று கவலையும் அடைகிறதாம் ஸ்வீடன்!
சில தனியார் நிறுவனங்கள் தங்களது குப்பைகளை அரசாங்கத்துக்குத் தராமல் எரித்து விட்டால் இழப்பீடு கேட்கிறது ஸ்வீடன் அரசு! ஏனென்றால் அந்தக் குப்பைகளிலிருந்து மின்சாரம் தயாரித்திருக்கலாம் என்று கூறுகிறது!
இன்னொரு சுவாரசியமான விஷயம் இருக்கிறது!
தற்போது கையிருப்பிலுள்ள குப்பைகள் தீர்ந்து விடும் நிலைமை உள்ளது. எனவே வெளிநாடுகளிலிருந்து டன் கணக்கில் குப்பைகளை வாங்கிக் குவித்து வருகிறது ஸ்வீடன்!
குப்பைகளை நிர்வாகம் செய்வது பற்றி கவலையுடன் பல நாடுகள் கையைப் பிசைந்து கொண்டிருக்கையில் ஸ்வீடன் வெளிநாட்டுக் குப்பைகளுக்குப் பச்சைக் கொடி காட்டியிருக்கிறது!
தற்போது தனது நாட்டின் 97 சதவீதம் மின்சாரத்தேவையைப் பூர்த்தி செய்து விட்டது ஸ்வீடன்! நாட்டின் 100 சதவீத மின்சக்தித் தேவையையும் குப்பைகளை மறுசுழற்சி செய்து பெற்றுவிட உறுதி கொண்டிருக்கிறது!
சுவீடன் இதை, ""மறு சுழற்சிப் புரட்சி!'' என பெருமையுடன் சொல்லிக் கொள்கிறது!
வாழ்க சுவீடனின் மறுசுழற்சிப் புரட்சி!''
தொகுப்பு : கோட்டாறு ஆ.கோலப்பன்
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

7 ஆண்டுகளுக்குப் பின்.. இந்தியாவில் நங்கூரமிட்ட ஈரானிய எண்ணெய் கப்பல்கள்

நெல் ஊக்கத்தொகை: முதல்வர் ஸ்டாலின் கேட்ட கடிதத்தை வெளியிட்ட நிர்மலா சீதாராமன்!
சாத்தூர் பட்டாசு ஆலை விபத்து! ஒருவர் பலி; மூவர் படுகாயம்!

உ.பி.யில் தனியார் நிறுவன ஊழியர்கள் போராட்டத்தில் வன்முறை
வீடியோக்கள்
Delhi Vs Chennai | முதல்வரின் சிறுபிள்ளைத்தனம்! அண்ணாமலை Press Meet | BJP | DMK
இணையதளச் செய்திப் பிரிவு

காட்ஸ் அண்ட் சோல்ஜர்ஸ் டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

டார்லிங் மறுவெளியீட்டு டிரைலர்!
தினமணி செய்திச் சேவை

சிஎஸ்கேவின் பாதை, இனி சிங்கப் பாதை! | Chennai Super Kings | CSK | Sanju Samson |
தினமணி செய்திச் சேவை


