பல்வேறு விதமான புதிய தொழில் நுட்பங்கள் புகுத்தி பல துறைகளும் இந்தியாவில் வளர்ச்சி அடைந்துள்ளன. இதற்குக் கட்டுமானத் துறையும் விதி விலக்கல்ல! வழக்கமான பொருள்களுக்கு பதிலாக மாற்றுக் கட்டுமானப் பொருள்களை உபயோகப்படுத்துவதில் நமக்கு இன்னும் தயக்கம் இருக்கத்தான் செய்கிறது! நாம் இன்னும் பாரம்பரியமான கட்டுமானப் பொருள்களையே பயன்படுத்தி வருகிறோம்.
மேலும் கட்டுமான நிறுவனங்கள் கூட இந்த புதிய கட்டுமானப் பொருள்களை உபயோகப்படுத்த சற்று தயக்கம் காட்டுகின்றன.
சிறிய வீடுகளில் தொடங்கி மிகப் பெரிய அடுக்குமாடிக் குடியிருப்புகள் வரை செங்கற்கள், மணல், சிமென்ட் கலவை இவற்றைக் கொண்டே பெரும்பாலும் கட்டுமானங்கள் உருவாக்கப்படுகின்றன.
மேற்கத்திய நாடுகளில் தற்போது ஈ.பி.எஸ். என்று அழைக்கப்படும் தெர்மோகோல் தொழில் நுட்பத்தைப் பயன்படுத்தி கட்டுமானப் பணிகள் நடைபெறுகின்றன.
உயர் அழுத்த நிலையில் தெர்மோகோல் உறுதியாகி விடுகிறதாம்.
கட்டுமானங்களின் வெளிப்பூச்சுக்கு, "எக்ஸ்டர்னல் இன்சுலேஷன் அண்ட் ஃபினிஷ் சிஸ்டம்' என்னும் சிந்தடிக் பூச்சைப் பயன்படுத்துகின்றனர்.
ஈ.பி.எஸ். ஷீட்களை கம்பிகளால் கட்டி, பாலிமர் சேர்க்கப்பட்ட சிமென்ட் கலவையுடன் வெளிப்புறத்தில் பூசி விடுவார்கள். இத்தகைய பொருள்களுடன் அமையும் கட்டடத்தின் வெளிப்பூச்சு சிமென்ட் கலவைப் பூச்சுக்கு இணையாக வெயிலையும், மழையையும் மற்ற எல்லா சிதோஷ்ண நிலைகளையும் எதிர்கொள்ளும் என்கிறது ஈ.பி.எஸ். பயன்பாடு குறித்த இணைய தளம்!
இன்று இந்தியாவிலும் ஈ.பி.எஸ். தொழில் நுட்பத்தில், தெர்மோகோலை உபயோகப் படுத்தி, கட்டுமான வேலைகள் நடைபெறுகின்றன.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

பள்ளியில் ஆசிரியை வெட்டிக் கொலை! கணவர் தலைமறைவு

சென்னை வாக்காளர்கள் கவனத்திற்கு! ஏப்ரல் 16 முதல் தபால் வாக்குப்பதிவு

சுவர் இடிந்து, சாலையோரத்தில் நடந்து சென்ற பெண் பலி!

தில்லி சட்டப்பேரவைக்கு வெடிகுண்டு மிரட்டல்
வீடியோக்கள்
Delhi Vs Chennai | முதல்வரின் சிறுபிள்ளைத்தனம்! அண்ணாமலை Press Meet | BJP | DMK
இணையதளச் செய்திப் பிரிவு

காட்ஸ் அண்ட் சோல்ஜர்ஸ் டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

டார்லிங் மறுவெளியீட்டு டிரைலர்!
தினமணி செய்திச் சேவை

சிஎஸ்கேவின் பாதை, இனி சிங்கப் பாதை! | Chennai Super Kings | CSK | Sanju Samson |
தினமணி செய்திச் சேவை


