சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 பேரும் குற்றவாளிகள்! ஈரான் போர் தற்காலிகமாக 5 நாள்களுக்கு நிறுத்தம்! டிரம்ப் அறிவிப்புபாஜகவுக்கு 27, பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு!மேற்காசியப் போரால் பொருளாதார பாதிப்பு! மக்களவையில் மோடி உரை! அமெரிக்காவில் தீயணைப்பு வாகனம் மீது விமானம் மோதி விபத்து தில்லி குண்டுவெடிப்பு வழக்கு: காஷ்மீரின் பல்வேறு இடங்களில் என்ஐஏ சோதனை பட்டியலின இளம்பெண் தற்கொலை: திருமாவளவனுக்கு இபிஎஸ் கேள்வி
/

அங்கிள் ஆன்டெனா

கடல்  நீரை வாயில் வைக்க முடிவதில்லை. அப்படி ஒரு உப்புக் கரிப்பு. கடல் நீருக்கு எப்படி இந்த உப்புச் சுவை வந்தது?

News image
Updated On :9 ஜனவரி 2021, 12:30 am

DIN


கேள்வி: கடல்  நீரை வாயில் வைக்க முடிவதில்லை. அப்படி ஒரு உப்புக் கரிப்பு. கடல் நீருக்கு எப்படி இந்த உப்புச் சுவை வந்தது?

பதில்: நிலப்பகுதியில் உள்ள பாறைகள் மற்றும் கற்களினால் தான் கடல் நீருக்கு இந்த உப்புச் சுவை வந்தது என்கிறார்கள் ஆராய்ச்சியாளர்கள். எல்லாம் ஒரு காரியமாகத்தான். இல்லையில்லை மூன்று காரியங்களாகத்தான்...   

கரியமில வாயுவுடன் (கார்பன்-டை-ஆக்ûஸட்)  நீர் சேரும்போது  அந்த நீருக்கு அமிலத் தன்மை வந்து விடு கிறது. 

மழை நீர் நிலத்தில் விழும்போது, சுற்றுப்புறத்தில் உள்ள காற்றில் கலந்து இருக்கும் கார்பன்-டை-ஆக்ûஸட் உடன் சேர்ந்து சற்றே அமிலத்தன்மை கொண்ட நீராக மாறுகிறது.

இப்படி அமிலத்தன்மை கொண்ட நீர்தான் நிலப்பகுதியில் உள்ள பாறைகளை அரிக்க ஆரம்பிக்கிறது. கடற்கரையோரப் பகுதிகளில் உள்ள பாறைகள் நீர் பட்டு பட்டு அரித்து இருப்பதைக் காண முடியும். 

இப்படி மழை நீர் பாறைகளை அரிக்கும்போது மின்  வயப்பட்ட அணுத்துகள்கள் உண்டாகின்றன. இந்த அணுத்துகள்கள் நீரில் கலந்து குட்டைகளிலும் சிறிய ஓடைகளிலும் சேர்ந்து கொண்டு கடைசியில் கடலில் சென்று கலக்கின்றன.

கடல் நீரில் இருக்கும் பலவித ஆர்கானிசம்களின் மூலம் இந்த மின்வயப்பட்ட அணுத்துகள்கள் காலம் காலமாகக் கடல் நீரில் சேர்ந்து கொண்டே இருக்கின்றன. இந்த அணுத் துகள்களில் சோடியம் மற்றும் குளோரைட் அதிகமாக இருக்கும். இந்த சோடியமும் குளோரைடும் சேர்ந்துதான் கடல் நீருக்கு உப்புச் சுவையை ஏற்படுத்திக் கொடுக்கின்றன. இந்த நிகழ்வு தொன்றுதொட்டு நடந்து வருவதால் கடல் நீர் உப்புச் சுவையுடன்தான் இருந்தாக வேண்டிய கட்டாயம்!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.