ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!மினி வேன், பைக் மீது அரசுப் பேருந்து மோதல்! குழந்தைகள் உள்பட 7 பேர் பலி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!தில்லி சென்றாலே முதல்வர் ஸ்டாலின் பயப்படுகிறார்! - டிடிவி தினகரன்சுயநலனுக்காக கட்சியை தில்லியிடம் அடமானம் வைத்த இபிஎஸ்! முதல்வர் ஸ்டாலின்
/

நான் ஆற்றல் பெற்று மலர்ந்திடுவேன்!

சிறிய விதைக்குள் ஆலமரம் சிசுவாய் உள்ளே இருக்கிறது!அறிஞன் ஆகும் தகுதியெல்லாம் - இந்த 

News image
Updated On :3 ஜூலை 2021, 12:30 am

பூதலூர் முத்து

சிறிய விதைக்குள் ஆலமரம் 
சிசுவாய் உள்ளே இருக்கிறது!
அறிஞன் ஆகும் தகுதியெல்லாம் - இந்த 
அரும்பின் உள்ளே இருக்கிறது!

மண்ணில் விழுந்த விதையெல்லாம் 
தண்ணீர் கிடைத்தால் கிளர்ந்தெழுமே!
அன்புத் தண்ணீர் ஊற்றுங்கள்! - நான் 
ஆற்றல் பெற்று மலர்ந்திடுவேன்!

"எதுவும் முடியும் உன்னாலே' 
என்று சொல்லி வளருங்கள்!
உதவும் கரங்கள் உன் கரங்கள் - எனும் 
உன்னத எண்ணம் பதியுங்கள்!

கதையில் கூட முன்னேற்றம்
காணும் கதையைக் கூறுங்கள்!
விதியைக் கூட வெல்கின்ற - நல் 
வித்தை தன்னைச் சொல்லுங்கள்!

துன்பம் எல்லாம் தூளாக 
துணிவைத் தந்து வளருங்கள்!
இன்பம் பெறலாம் உழைப்பாலே
என்பதை மனத்தில் விதையுங்கள்!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.