நாளை மார்க்சிஸ்ட் கம்யூ. அவசர செயற்குழுக் கூட்டம் காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

கருவூலம்: உலகின் மிகப் பெரிய தொங்கு பாலம்!

தென் அமெரிக்காவிலுள்ளது "பெரு' என்னும் நாடு. இங்கு ஹூயின்ஷிரி மாவட்டத்தில் ஆண்டன் மலைப் பகுதியில் இருக்கும்  இரு மலைகளை இணைக்கும் தொங்கு பாலம் ஒன்று இருக்கிறது.

News image
Updated On :5 ஜூன் 2021, 12:30 am

சுமன்

தென் அமெரிக்காவிலுள்ளது "பெரு' என்னும் நாடு. இங்கு ஹூயின்ஷிரி மாவட்டத்தில் ஆண்டன் மலைப் பகுதியில் இருக்கும்  இரு மலைகளை இணைக்கும் தொங்கு பாலம் ஒன்று இருக்கிறது. இந்தப் பாலம் முழுக்க முழுக்க செடி கொடிகளின் கிளைகளாலும் புற்களைத் திரித்துத் தயாரித்த கயிறுகளாலும் கட்டப்பட்டுள்ளது. கட்டியவர்கள் அங்குள்ள பழங்குடி மக்கள்! சுமார் 56 மனிதர்களின் எடையை இந்தப் பாலம் தாங்குகிறது. ஆண்டன் மலைகளுக்கு இடையே பாயும் "அபுரிமாக்' நதியின் மீது இந்தப் பாலம் கட்டப்பட்டுள்ளது.  சுமார் 90 அடி நீளம் கொண்டது இந்தப் பாலம்! நதியிலிருந்து 52 அடி உயரத்தில் இந்தப் பாலம் கட்டப்பட்டுள்ளது. அது மட்டுமல்ல....  இது போன்ற சுமார் 200 பாலங்களை இந்தப் பழங்குடியினர் கட்டியிருக்கிறார்களாம். ஆனால் அவை அனைத்தும் புழக்கமின்றி பழுதடைந்து விட்டதாம்! தற்போது எஞ்சியுள்ளது இந்தத் தொங்கு பாலமே! இந்தப் பாலத்தை மட்டும் இங்குள்ள பழங்குடி மக்கள் வருடத்திற்கு ஒரு முறை புதிப்பிக்கிறார்.கள் அது ஒரு சடங்காகவே நடைபெறுகிறது! மலை கிராம அதிகாரிகளும், அரசு அதிகாரிகளும் , வியாபாரிகளும்,  இந்தப் பாலத்தைக் கடந்துதான் கிராமங்களுக்குச் செல்ல இயலுமாம்.

சுற்றுலா செல்லும் போது இதைப் பார்த்த போர்ச்சுகல் நாட்டவர்கள் இந்தப் பாலத்தைக் கண்டு மிகவும் பிரமித்துவிட்டனர்! தங்கள் நாட்டிலும் இது போன்றதொரு தொங்கு பாலத்தைக் கட்டும் எண்ணம் உருவாகி, அதை நிறைவேற்றியும் உள்ளார்கள்!  அம்பின் முனை போன்ற அமைப்பில் மலையின் இருபுறங்களிலும் அஸ்திவாரம் போடப்பட்டு பாலத்தைத் தாங்கும் தூண்கள் ஏதுமின்றி இந்த நடைபாதைத் தொங்குபாலம் கட்டப்பட்டுவிட்டது!  தற்போது சுற்றுலாப் பயணிகளுக்குத் திறந்து விடப்பட்டுள்ளது! போர்ச்சுகல் நாட்டிலிலுள்ள "அரோவ்கா' மலைகளுக்கு இடையே ஓடும் "பைவா' நதியின் மீது இந்தப் பாலம் கட்டப்பட்டுள்ளது.  பாலத்தின் நீளம் 1692 அடி! தரையிலிருந்து 573  அடி உயரத்தில் இந்த நடைபாதைத் தொங்குபாலம் கட்டப்பட்டுள்ளது.  மேலும் பைவா நதியின் ஓரத்தில் சுமார் 8 கி.மீ. நீளத்தில் அமைந்துள்ள மரப்பாதைகளின் நடந்து காடுகளையும், நதியையும், நீர்வீழ்ச்சிகளையும் பார்த்து ரசிக்கலாம். ஜப்பானில் 2006 - இல் "கோகோனே யூமே' தொங்குபாலம் 2017 - ஆம் ஆண்டுவரை உலகின் மிகப் பெரிய தொங்குபாலமாக இருந்தது. இதன் நீளம் 1280 அடியாகும். அதற்குப் பிறகு சுவிட்சர்லாந்தின் "சார்லஸ் கோனென்' தொங்குபாலம் 1621 அடி நீளத்தில் கட்டப்பட்டு உலகின் முதன்மையான தொங்குபாலமாக ஆகிவிட்டது! அதற்குப் பிறகு இப்போது குறிப்பிட்டுள்ள அரோவ்கா தொங்குபாலமே தற்போது மிகப் பெரிய நடைபாதைத் தொங்குபாலமாக விளங்குகிறது! சுற்றுலாப் பயணிகள் இந்தப் பாலத்தைக் கடக்கும்போது மயிர்கூச்செறியும் அனுபவமாகக் கருதுகிறார்களாம்! 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.