எதிரொலி!

ஆராவமுதன் என்ற சிறுவன் ஆடுகள் மேய்ப்பவன். ஆடுகளை ஓட்டிக்கொண்டு மலைமுகட்டுக்குச் சென்றான். அப்போது மந்தையிலிருந்த ஒரு ஆடு பாறை இடுக்கில் போய் ஒளிந்து கொண்டது.
எதிரொலி!

ஆராவமுதன் என்ற சிறுவன் ஆடுகள் மேய்ப்பவன். ஆடுகளை ஓட்டிக்கொண்டு மலைமுகட்டுக்குச் சென்றான். அப்போது மந்தையிலிருந்த ஒரு ஆடு பாறை இடுக்கில் போய் ஒளிந்து கொண்டது.
""ஆடே எங்கே போனே?'' என்று கத்தினான் ஆராவமுதன்.
""ஆடே எங்கே போனே?'' என்று அவன் குரல் மலை முகட்டில் பட்டு எதிரொலித்தது. பயந்து விட்டான். தன் குரலை யாரோ கேலி செய்கிறார்கள் என்று நினைத்தான். ஆராவமுதனுக்குக் கோபம் வந்தது.
அவன் மறுபடி, ""யாரடா என்னைக் கேலி செய்பவன்?'' என்று கத்தினான். ஒலியின் வேகமும் அதிகரித்தது.
""யாரடா என்னைக் கேலி செய்பவன்? .....யாரடா என்னைக் கேலி செய்பவன்?.... யாரடா என்னைக் கேலி செய்பவன்?... '' என்று மறுபடியும், மறுபடியும் கேட்டது. நிறைய பேர் தன்னை திட்டுவதாக அவனுக்குத் தோன்றியது. பயமாகவும் இருந்தது. அவன் ஆடுகளை ஒருவழியாக ஓட்டிக்கொண்டு கோபமாக வீட்டுக்குச் சென்றான்.
அம்மாவிடம், ""அம்மா எனக்கு மலை முகட்டிலே நிறைய எதிரிகள் இருக்காங்க.... பயமாவும், கோபமாவும் இருக்கு!'' என்றான். அவனுக்கு அழுகை வந்தது.
விவரம் என்ன என்பதைப் புரிந்துகொண்டாள் அம்மா. ஆராவமுதனிடம், ""நாளைக்கு நீ மலை முகட்டுக்குப்போய் நட்பாகப் பேசு!... அவர்கள் நண்பர்களாவார்கள்!'' என்றாள் அம்மா.
மறுநாள் மீண்டும் ஆடுகளோடு மலைமுகட்டுக்குச் சென்று, ""நண்பா நீ நலமா?'.... சாப்பிட்டாயா?'' என்று கேட்டான்.
எதிரொலியும் அப்படியே கேட்டது. சந்தோஷமாய் வீட்டுக்கு வந்தான் ஆராவமுதன். பிறகு அம்மா அவனுக்கு எதிரொலி பற்றி விளக்கினாள். நம்மிடமிருந்து வெளிப்படும் இனிய சொற்களே நமக்குத் திரும்ப வரும் என்றும் கூறினாள். ஆராவமுதனும் அம்மாவைக் கட்டிக்கொண்டான்!

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com