மீஞ்சூரில் மாணவியிடம் பாலியல் அத்துமீறல்! அரிவாளால் வெட்டிய இளைஞர்கள்! திமுக தோற்க வேண்டும் என ராகுல் நினைக்கிறார்: அண்ணாமலை பேச்சுதொகுதி மறுவரையறை! தமிழ்நாட்டில் நாளை கருப்புக் கொடிப் போராட்டம்! - மு.க. ஸ்டாலின் அறிவிப்பு திமுக எம்பிக்களுடன் முதல்வர் ஸ்டாலின் ஆலோசனை! ஏப். 17ல் ஆண்டிபட்டியில் 6-ம் கட்ட பிரசாரத்தைத் தொடங்குகிறார் முதல்வர்!உதயநிதி சொத்து விவரம்: வருமானவரித் துறை அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவு!பிகார் முதல்வராக பதவியேற்றார் சாம்ராட் சௌதரி!தங்கம் விலை சவரனுக்கு ரூ. 800, வெள்ளி கிலோ ரூ. 10,000 உயர்வு!வானதி சீனிவாசனுக்கு ஆதரவாக தில்லி முதல்வர் ரேகா குப்தா பிரசாரம்!நாகா்கோவிலில் இன்று பிரதமா் மோடி சாலைப் பேரணி
/

கடி

""தப்பு செஞ்சா அவங்ககிட்டே சாரி கேக்கணும்!''""ஏன்?.... சுடிதார், டாப்ùஸல்லாம் கேக்கக்கூடாதா?'

News image
Updated On :15 மே 2021, 11:04 am

""தப்பு செஞ்சா அவங்ககிட்டே சாரி கேக்கணும்!''
""ஏன்?.... சுடிதார், டாப்ùஸல்லாம் கேக்கக்கூடாதா?''

ஆர்.எம்.அக்ஷயராம்,
திருநெல்வேலி டவுன் - 627006.

""குழந்தையைப் பக்கத்திலே வெச்சுக்கிட்டு போன்லே பேச முடியலே!''
""ஏன்? எதுக்கு போன்லே பேசணும்? குழந்தை பக்கத்துலதானே இருக்கு?...
நேரா பேச வேண்டியதுதானே!''

எம்.அசோக்ராஜா,
அரவக்குறிச்சிப்பட்டி.

""நீ ஏன் அவனுக்கு சப்போர்ட்டா பேசறே?''
""அவன் சப்போட்டா பழம் வெச்சிருக்கான்!...''

ஆர்.எம்.ஸ்ரீஅக்ஷயராம்,
திருநெல்வேலி டவுன்.


""கைலி வியாபாரி எப்படி சிரிப்பாரு?''
""குலுங்கி குலுங்கி சிரிப்பாரு!''

பா.ரேஷ்மா,
வந்தவாசி.

""எப்படிடா ஒரு நாளைக்கு இவ்வளவு தப்பு பண்றே?''
""நான் காலையிலே சீக்கிரம் எழுந்துடுவேன்!''

சி.ஆர்.ஹரிஹரன்,
அலுவா-683108.

""வெளியிலே போகும்போது மாஸ்க் போட்டுக்கணுங்கறதெல்லாம் சரி,... அதுக்காக கரடி மாஸ்க்கெல்லாம் போட்டுக்கிட்டு வராதீங்க அங்கிள்!.... தம்பி பயப்படறான்!''

எஸ்.சத்யா இராவி, 
கம்பைநல்லூர் - 635202.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.