நாளை மார்க்சிஸ்ட் கம்யூ. அவசர செயற்குழுக் கூட்டம் காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

நோயை விரட்டணும் தம்பி!

நாட்டின் நலன்கள் இன்று - நமை நம்பி இருக்குது தம்பி!உருமாறும் கிருமிகள் எதிர்க்க - நாம் 

News image
Updated On :29 மே 2021, 11:32 am

துஷ்யந்த் சரவணராஜ்


நாட்டின் நலன்கள் இன்று - நமை 
நம்பி இருக்குது தம்பி!
உருமாறும் கிருமிகள் எதிர்க்க - நாம் 
விழிப்புணர்வு கொள்ள வேணும்!

கூட்டத்தை தவிர்த்திடு தம்பி  - முகக் 
கவசத்தை அணிந்து கொள்வாய்!
கைகளை சோப்புப் போட்டு 
அடிக்கடி கழுவிக் கொள்வாய்!

வீட்டுத் தனிமையில் தம்பி - நாம் 
விரும்பி இருக்கவேணும்! 
ஊட்டம் நிறைந்த உணவை - நாம் 
விரும்பி உண்ணவேணும்!

நோயை எதிர்க்கும் ஊசி - அதனை 
உடலினுள் செலுத்திக்கொள்வாய்!
மருத்துவர் சொன்ன பேச்சை - நாம்
மறுப்பின்றி கடைப்பிடிப்போம்!

அரசின் விதிமுறைகள் 
நம் நலனுக் காகத் தானே
நித்தம் அதைக் கடைப்பிடித்து 
நோயை விரட்டணும் தம்பி!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.