கேள்வி: மிகவும் ஆழமான கடலுக்கு அடியில் அப்படி என்னதான் இருக்கிறது, இருக்க முடியும்? ஏதாவது கண்டுபிடித்திருக்கிறார்களா?
பதில்: மிகவும் ஆழமான கடலுக்குள் நாம் இதுவரை பார்த்திராத பல வகை உயிரினங்கள் வாழ்கின்றன. இவை அனைத்துக்கும் பெயரிட்டிருக்கிறார்கள். அத்தனை பெயர்களும் வாயில் நுழையாதவை. ஆகவே பெயர்களை விட்டு விடுவோம்.
இவ்வளவு ஆழத்தில் இருக்கும் இந்த உயிரினங்கள் எதைச் சாப்பிட்டு வாழ்கின்றன? அந்த ஆழத்தில் இருக்கும் சில விநோதச் செடிகளால் பச்சையம் தயாரிக்கக் கூட முடியாது. ஏனென்றால், சூரிய ஒளி அங்கே படுவதே இல்லை. இங்குள்ள உயிரினங்களுக்கு உணவு - அந்த வினோதச் செடிகளின் அழுகிய இலைகளும் மக்கிய வேர்களும்தான்.
அப்புறம் இறந்த உயிரினங்களின் மக்கிய பாகங்களும்தான். பாவம் என்றுகூடச் சொல்ல முடியாது. ஆனாலும் இவையும் வாழ்ந்து கொண்டுதான் இருக்கின்றன. மிகவும் ஆழமான கடல் பகுதி "சேலஞ்சர் டீப்' என்று அழைக்கப்படுகிறது. இது பசிபிக் பெருங்கடலில் உள்ளது. இதன் ஆழம் எவ்வளவு தெரியுமா? 10,904 மீட்டர்கள் (36,070 அடிகள்).
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

திமுக கூட்டணிக்கு அசாதுதீன் ஓவைசியின் ஏஐஎம்ஐஎம் ஆதரவு!

ரிஷப ராசிக்கு மகிழ்ச்சி: தினப்பலன்கள்!
எடப்பாடி பழனிசாமி பிரசாரத்துக்கு தடை கோரிய வழக்கு தீா்ப்புக்காக ஒத்திவைப்பு!

தமிழகத்தில் ஆட்சி மாற்றத்தை விரும்பும் மக்கள்: சந்திரபாபு நாயுடு
வீடியோக்கள்

நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை

டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு

கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | தோல்வியைச் சந்திக்காத பஞ்சாப்: எழுச்சி பெறாத லக்னௌ! | Punjab Kings | Priyansh Arya |
தினமணி செய்திச் சேவை


