குழந்தைகளே நலமா,
நான் தான் விடத்தலை மரம் பேசுகிறேன். எனது தாவரவியல் மிமேசா சினெரியா அல்லது டைக்ரோஸ்டேகிஸ் சினெரியா என்பதாகும். நான் மைமொசியேசி குடும்பத்தைச் சேர்ந்தவன். எனக்கு ஆனைத் தேர், வரித்துலா, வெடுத்தலாம், வீரத்தரு, விடத்தேரை, சிக்கிள் பாபுல் ஆஷி என்ற வேறு பெயர்களும் உண்டு. நான் அதிகபட்சம் ஆறு மீட்டர் உயரம் வளரும் ஒரு சிறுமரமாவேன். கடுகு சிறுத்தாலும் காரம் குறையாது இல்லையா. என் தாயகம் இந்தியா.
என் பூக்கள் பார்க்க மிகவும் கவர்ச்சிகரமாக இருக்கும். என் பூக்களுக்கு ஒரு சிறப்பு உண்டு குழந்தைகளே! என்னன்னு கேட்கறீங்களா, நான் ஐந்து விதமாகப் பூப்பேன். அதாவது குழந்தைகளே, என் பூ முதலில் பச்சை நிறமாக அரும்பும், பின் மஞ்சளாக, குங்கும நிறமாக, பின் வெளிர் குங்கும நிறமாக கடைசியில் வெள்ளை நிறமாகவும் மாறும். அதன் வடிவம் குப்பிகளை கழுவ உதவும் பிரஷ் வடிவத்தில் இருக்கும். பூவில் ஒரு பாதி ஊதா நிறத்திலும், மீதி மஞ்சள் நிறத்திலும் இருக்கும். என் காய்கள் ஒன்றோடு ஒன்று முறுக்கிய வடிவில் இருக்கும். என்னிடமும் பல மருத்துவ குணங்கள் இருக்கு, சொல்லட்டுமா ? கேட்கறீங்களா ?
குழந்தைகளே, நவகோள்களில் ஒன்றாக சனியின் அம்ச மரமாய் என்னை சொல்வாங்க. அது மட்டுமா, விடத்தலை கற்பம் என்பது மரணத்தை வெல்லும் அல்லது உடலை அழியாது காக்கும் தன்மையுடையது என சித்தர்கள் சொல்லியிருங்காங்களாம். என் பூ, காய், இலை ஆகியவை சம அளவில் எடுத்து சுத்தமான தண்ணீரில் போட்டு நன்கு காய்ச்சி குடித்து வந்தால் கை, கால்களில் ஏற்படும் பிடிப்பு அறவே நீங்கிடும்.
என் மரத்திலிருந்து எடுக்கப்படும் பிசினை உலர்த்தி பொடி செய்து, கற்கண்டில் கலந்து சாப்பிட்டு வந்தால், உடல் வெப்பம் தணிந்து பலம் பெறும். என் வேர் மற்றும் பட்டையை எடுத்து நன்கு இடித்து சூரணமாக செய்து, பின் நிழலில் உலர்த்தி தினமும் தேனில் கலந்து சாப்பிட்டு வந்தால் உங்கள் உடலானது மாசற்ற வைரம் போல் வலிமை பெறுவதுடன், குஷ்டம் போன்ற நோய்கள் நீங்கிடும், கண் பார்வை இழந்தவர்கள் மீண்டும் பார்வை பெறுவார்கள்.
என் இலைகள் மிகச் சிறியதாக இருக்கும். என் இலைகளை நன்றாக கழுவி, சுடுநீரிலிட்டு குடித்து வந்தால் செரியாமை பிரச்னை நீங்கி, வயிற்றுப் போக்கு சட்டுன்னு நின்று விடும். அதோட உங்களுக்கு வயிறு தொடர்பான எந்தப் பிரச்னையும் வராது. என் இலைகள் கால்நடைகளுக்கு நல்ல தீவனமாகும். கிராமப் புறங்களில் வாழும் ஏழை, எளிய மக்கள் என்னை அடுப்பெரிக்க பயன்படுத்தறாங்க.
பருவநிலை மாற்றம் மற்றும் பல்லுயிர் பெருக்கத்தைக் காக்க பெரிதும் உதவுவது மரங்கள் தானே குழந்தைகளே. குழந்தைகளே, எதிர்காலம் உங்கள் கையில் தான் இருக்கிறது. இந்த பூமியின் எதிர்காலம் நன்றாக இருக்க வேண்டுமென்றால் நிழல், காய், கனிகளைத் தரும் மரங்களை வளர்க்க வேண்டும் என்பது உங்களுக்குத் தெரியுமல்லவா.
வருங்கால சந்ததியினருக்கு வாழையடி வாழையாக மரங்களை விட்டுச் செல்லுங்கள். இந்த கரோனா தீநுண்மி காலத்தில் நீங்கள் பிராண வாயு இல்லாமல் மிகவும் கஷ்டப்பட்டீர்கள் என்பதை அறிந்து நாங்கள் மிகவும் வருந்தினோம். இதற்கு காரணம் என்ன குழந்தைகளே, மரங்களை அழித்தீர்கள், வளம் கொழிக்கும் மண்ணை சிமெண்ட் தரைகளாக மாற்றினீர்கள், பெய்யும் மழை எங்கும் தங்கும், வீணாக கால்வாய்களில் தானே கலக்கின்றன. மரங்களை அழித்து, தொழிற்சாலைகள் அமைக்கிறோம் என்று சொல்லி, அதிலிருந்து வரும் கழிவுகளை ஆறுகளில் விட்டீர்கள், இப்போது பருகும் நீரும் நஞ்சாகி வருகின்றன. நாங்கள் இருக்கும் போது, உங்களுக்கு இது தேவையா, சொல்லுங்கள் குழந்தைகளே. ஒரு மரம் ஆயிரம் குழந்தைகளுக்கு சமம். தினம் ஒரு மரம் நடுங்கள். மரங்களை வளர்க்கும் மனங்களை வளர்ப்போம்.
நான் தேனி மாவட்டம், குச்சனூர், அருள்மிகு சனீஸ்வர பகவான் திருக்கோயிலில் தலவிருட்சமாக இருக்கேன். நன்றி குழந்தைகளே, மீண்டும் சந்திப்போம்.
(வளருவேன்)
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

என்ஜினீயா் வீட்டில் நகைகள் திருட்டு

11.4.1976: பொது பணத்தில் நிறுவிய பாலம், கல்வி சாலைகளின் தனியார் பெயர்களை நீக்க த.நா. அரசு முயற்சி

பேரவைத் தோ்தல் முன்னேற்பாடுகள் மாவட்டக் காவல் பாா்வையாளா் ஆய்வு

அதிமுக ஆட்சி அமைந்தவுடன் வெண்ணைமலை கோயில் நிலப் பிரச்னைக்கு தீா்வு: அண்ணாமலை பேச்சு
வீடியோக்கள்

DINAMANI வார ராசிபலன்! | Apr. 12 முதல் Apr. 18 வரை! | ஜோதிடரத்னா ராமராமாநுஜதாஸன்! | Weekly Horoscope
இணையதளச் செய்திப் பிரிவு

தில்லியை வென்று நம்பிக்கையைப் பெறுமா சிஎஸ்கே? | CSK v DC Match Preview |
தினமணி செய்திச் சேவை

LIK Movie Review | தீமா.. தீமா.. தேறுமா! | Pradeep Ranganathan | Vignesh Shivan | krithi shetty
தினமணி செய்திச் சேவை

புதுச்சேரி & கேரளத்தில் வாக்குப்பதிவு நிறைவு! வாக்குப்பதிவில் நடந்த சுவாரசியங்கள்!
தினமணி செய்திச் சேவை


