சென்னையில் பிரதமர் மோடி முக்கிய ஆலோசனை! அண்ணாமலை பங்கேற்பு!நான் எந்தத் தொகுதியும் கேட்கவில்லை: அண்ணாமலை விளக்கம்தங்கம் விலை சவரனுக்கு ரூ. 800 உயர்வு! புதுச்சேரியில் இன்று விஜய் பிரசாரம்நாளை 8 புறநகா் மின்சார ரயில்கள் ரத்துமின்சார அடுப்புகள், பாத்திரங்கள் உற்பத்தியை ஊக்குவிக்க நடவடிக்கை: மத்திய அரசு ஆலோசனைசென்னைப் பல்கலை. வளாகங்களில் படப்பிடிப்புகளுக்கு 5 மடங்கு கட்டண உயா்வு6-ஆம் வகுப்புமுதல் மும்மொழிப் பாடம்: சிபிஎஸ்இ திட்டம்
/

 அங்கிள் ஆன்டெனா

அதிவேகமாக ஓடக்கூடிய மான்களைக்கூட சிங்கம் புலி போன்றவை அடித்துச் சாப்பிட்டு விடுவதை டிஸ்கவரி சேனலில் அடிக்கடி காட்டுகிறார்கள்.   மான்கள் இப்படி அநியாயமாக உயிரிழப்பதற்காகாத்தான் படைக்கப் பட்டுள்ளனவா?

News image
Updated On :23 அக்டோபர் 2021, 12:30 am


கேள்வி: அதிவேகமாக ஓடக்கூடிய மான்களைக்கூட சிங்கம் புலி போன்றவை அடித்துச் சாப்பிட்டு விடுவதை டிஸ்கவரி சேனலில் அடிக்கடி காட்டுகிறார்கள்.  மான்கள் இப்படி அநியாயமாக உயிரிழப்பதற்காகாத்தான் படைக்கப் பட்டுள்ளனவா?

பதில்: அதெல்லாம் இல்லை... சிங்கம் புலிகளை விடவும் விரைவாக ஓடக்கூடிய சிறுத்தைக்கே சிலவகை மான்கள் பெப்பே காட்டிவிட்டு ஓடக்கூடியவை.

பொதுவாக சிங்கம், புலி போன்றவை வேட்டையாட வரும்போது மான்கள் கூட்டணி அமைத்துக் கொள்ளும். இப்படிக் கூட்டம் கூட்டமாக இருக்கும் மான்களைக் கண்டால் பெரிய விலங்குகள் ஒதுங்கித்தான் சென்றுவிடும்.

அதனால்தான் கூட்டத்தில் இருந்து ஒரு மானை தனித்துப் பிரித்துதான் சிங்கம், புலி போன்றவை வேட்டையாடும்.

ஆனால், கென்யா, உகாண்டா போன்ற ஆப்ரிக்க நாடுகளில் இம்பாலா என்று ஒரு வகை மான் இருக்கிறது. தரையில் காலை ஊன்றி ஒரு ஜம்ப் செய்தால் 10 அடி உயரத்துக்கு ஜிவ்வைன்று கிளம்பும். 30 அடி தூரத்தை ஒரே தாவில் கடக்கும்.

இந்த மான்களின் சிறப்பம்சம், எக்காரணம் கொண்டும் கூட்டத்தில் இருந்து பிரிந்து விடாது. சிறுத்தையின் பிரித்தாளும் சூழ்ச்சி இந்த வகை மான்களிடம் செல்லுபடியாகாது. வேறு வழியில்லாமல் சிறுத்தை "சீச்சீ... இந்த மான் புளிக்கும்!'  என்று ஓடிவிடும்....

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.