சொல் ஜாலம்

கீழே உள்ள குறிப்புகளைக் கொண்டு, சொற்களைக் கண்டுபிடித்து, கொடுக்கப்பட்டுள்ள கட்டங்களில் வரிசைக்கு ஒன்றாக சொற்களை நிரப்பவும்.
சொல் ஜாலம்
Updated on
1 min read

கீழே உள்ள குறிப்புகளைக் கொண்டு, சொற்களைக் கண்டுபிடித்து, கொடுக்கப்பட்டுள்ள கட்டங்களில் வரிசைக்கு ஒன்றாக சொற்களை நிரப்பவும். ஒவ்வொரு வரிசையிலும் வட்டமிட்டுக் காட்டப்பட்டுள்ள கட்டத்தில் உள்ள எழுத்துகளை எடுத்து ஒன்றாகக் கோர்த்தால் விடியற்காலையைக் குறிக்கும் நல்ல தமிழ்ச்சொல் ஒன்று கிடைக்கும். விடைக்குப் போகாமல் கண்டுபிடியுங்கள் பார்க்கலாம்...

1.  கூடாரத்துக்குள் பலவித சாகசங்கள் நடக்கும்...
2. வீட்டிற்கு விருந்து சாப்பிட வருபவரை இப்படிச் சொல்வார்கள்...
3.  எண்ணெய்ச் செக்கில் இது கிடைக்கும். அறிவு சற்றுக் குறைந்தவர்களுக்கும் இந்தப் பெயர் கிடைக்கும்...
4. இது வெளிப்பட்டுவிட்டால் இந்தப் பெயர் இருக்காது...
5.  சேர, சோழ, பாண்டியர்கள் அப்புறம்...


விடை: 


கட்டங்களில் வரும் சொற்கள்

1. சர்க்கஸ்  
2. விருந்தாளி  
3. புண்ணாக்கு  
4. ரகசியம்  
5. பல்லவர்

வட்டங்களில் சிக்கிய எழுத்துகள் மூலம் கிடைக்கும்  சொல் : கருக்கல்

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com