நமது முழங்கை தற்செயலாக எதிலாவது இடித்துக் கொண்டால் "ஷாக்' (மின்சார அதிர்ச்சி) அடித்தது போன்ற உணர்வு ஏற்படுகிறதே... இதற்குக் காரணம் என்ன?இந்த உணர்ச்சியை நம்மில் பலரும் அனுபவித்திருப்போம். முழங்கை தற்செயலாக மேஜையின் முனையில் இடித்துவிட்டாலோ, வேறு ஏதாவது கடினமான பொருளின் மீதோ இடித்தாலோ இந்த உணர்வு எல்லோருக்கும் ஏற்படும். இது ஏறக்குறைய "ஷாக்' அடித்தது போலவே இருக்கும்.
இதற்குக் காரணம் முழங்கையில் இருக்கும் (funny bone) நகைச்சுவை எலும்பு என்று பலர் கூறுவர். ஆனால், உண்மையில் இப்படியொரு எலும்பு கிடையாது. முழங்கையின் முனையில் இருக்கும் உல்நார் நரம்பு (ulnar nerve) என்ற நரம்புதான் இதற்குக் காரணம். இது உடம்பின் பல பகுதிகளை இணைக்கும் மிக நீண்ட நரம்பாகும். இது முழங்கையில் இருக்கும் எலும்புடன் இணைக்கப்பட்டிருக்கிறது. முழங்கையில் இந்த எலும்பு மிகவும் மெல்லிய தோல் மற்றும் கொழுப்பு குறைவான பகுதியில் உள்ளதால், இது எளிதில் பாதிக்கப்படுகிறது. இதனால்தான் "ஷாக்' அடிக்கும் உணர்வு ஏற்படுகிறதே தவிர, இதனால் எந்த பாதிப்பும் ஏற்படுவதில்லை. எனவே பயப்பட வேண்டாம். இதனால்தான் இந்த எலும்பை நகைச்சுவை எலும்பு என்று அழைக்கிறார்கள் போலும்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

ரிஷப ராசிக்கு மகிழ்ச்சி: தினப்பலன்கள்!
எடப்பாடி பழனிசாமி பிரசாரத்துக்கு தடை கோரிய வழக்கு தீா்ப்புக்காக ஒத்திவைப்பு!

தமிழகத்தில் ஆட்சி மாற்றத்தை விரும்பும் மக்கள்: சந்திரபாபு நாயுடு

‘எக்ஸ்’ தளத்தில் ஆபாச உள்ளடக்கம்: எலான் மஸ்குக்கு பிரான்ஸ் அழைப்பாணை
வீடியோக்கள்

நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை

டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு

கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | தோல்வியைச் சந்திக்காத பஞ்சாப்: எழுச்சி பெறாத லக்னௌ! | Punjab Kings | Priyansh Arya |
தினமணி செய்திச் சேவை


