அங்கிள் ஆண்டெனா

மானின் உடல் பாகங்களிலேயே மிகவும் ஆச்சரியமான சமாச்சாரம் கொம்புகள்தான்.
அங்கிள் ஆண்டெனா
Updated on
1 min read

கலைமான்களின் கொம்புகள், ஆண்டுதோறும் விழுந்து, புதிதாக முளைக்கின்றன என்கிறார்களே,  உண்மையா?
 

மானின் உடல் பாகங்களிலேயே மிகவும் ஆச்சரியமான சமாச்சாரம் கொம்புகள்தான்.  சிறந்த ஆர்க்கிடெக்ட் ஒருவரால் உருவாக்கப்பட்டது போன்ற அமைப்பைக் கொண்டவை.

ஒவ்வொரு மான் இனத்துக்கும் குறிப்பிட்ட வகை கொம்புகள் (மாடல்கள்) உள்ளன. கொம்பின் அமைப்பை வைத்தே மான்களை இனம் பிரித்துவிடலாம். ஒரு சாண் அளவுள்ள கொம்பிலிருந்து மிகவும் சிக்கலான வடிவைக் கொண்ட மிகப்பெரிய கொம்புகள் வரை விதவிதமான டிசைன்கள் உள்ளன. இளமையில் சிறிதாக இருக்கும் கொம்பில் மானின் வயது கூடக் கூட கிளைகளும் கூடிக் கொண்டே இருக்கும்.

கலைமானுக்கு மட்டுமல்ல, எல்லா மான்களுக்குமே ஆண்டுக்கொரு முறை கொம்புகள் புதுப்பிக்கப்படுகின்றன. கொம்பின் அடிப்பகுதியில் ஒரு வளையம் தோன்றி, அது மெதுவாக இறுக ஆரம்பிக்கும். இதனால் ரத்த ஓட்டம் தடைப்பட்டு கிளைகள் உணர்விழந்து போகும். பின் வெறுமனே ஒட்டிக்கொண்டிருக்கும் சுருங்கிய கிளைகளை ஏதோ ஒரு மரத்தில் தேய்த்து மான்கள் உதிர்த்துவிடும். பிறகு அந்த இடத்தில் புதிய கொம்பு முளைத்து வளர்ச்சியடைய ஆரம்பிக்கும். உணவு தேடிச் செல்லும் மான்கள் எதிரிகளிடமிருந்து தப்பிப்பதற்கு இந்தக் கொம்புதான் ஆயுதம்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com