அதிசய மிருகமில்லை; எறும்பேதான்...!
சிறிய உயிரினங்களை காமிரா கொண்டு படம்பிடித்து காட்டுவதுதான் மைக்ரோஸ்கோபிக் போட்டோகிராபி. இந்த வகையில், படம் பிடிக்கப்பட்ட எறும்புதான் இது.


சிறிய உயிரினங்களை காமிரா கொண்டு படம்பிடித்து காட்டுவதுதான் மைக்ரோஸ்கோபிக் போட்டோகிராபி. இந்த வகையில், படம் பிடிக்கப்பட்ட எறும்புதான் இது.
நிக்கான் நிறுவனம் நடத்திய போட்டியில் தற்போது லிதுவேனியன் புகைப்படக் கலைஞர் ஒருவர் வெற்றி பெற்றுள்ளார். இந்தப் புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
படத்தில் பார்ப்பது பல மடங்கு பெரிதாக்கப்பட்ட எறும்பின் முகம். இதில் கண்கள், மூக்கு, கூர்மையான பற்களை கொண்ட வாய் என அனைத்தையும் தெளிவாகப் பார்க்க முடிகிறது. இவை சினிமாக்களில் காட்சிப்படுத்தப்பட்ட ஏலியன்களின் உருவங்களின்படியே இருப்பதாகக் கூறுகிறார்கள்.
இணையத்தில் பலரும் பலவிதமான பின்னூட்டங்களைப் பகிர்ந்து வருகின்றனர். அதில் ஒருவர், ""இது என்ன திகில் படத்தின் காட்சியா? இல்லை. இது ஓரு எறும்பின் உண்மை முகம். இனி இரவு முழுக்க நீங்கள் இதை நினைத்து அஞ்சுவீர்கள்'' என்று பதிவிட்டுள்ளார். இன்னொருவரோ, ""ட்ராகன்கள் எல்லாம் இன்னும் அழியவில்லை. அவை அளவில் சுருங்கி எறும்பாகிவிட்டதோ?'' என்று கிண்டலடித்துள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது


வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...