நாளை மார்க்சிஸ்ட் கம்யூ. அவசர செயற்குழுக் கூட்டம் காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

அமைதி நேரு

ஆசிய ஜோதியாம் நம் நேருஅன்பு மொழிகளைச் சொன்னாரு!

News image
Updated On :13 நவம்பர் 2022, 12:30 am

பொன்.செல்வகுமார்


ஆசிய ஜோதியாம் நம் நேரு
அன்பு மொழிகளைச் சொன்னாரு!
குழந்தைகளைக் கொஞ்சி மகிழ்ந்து
குதூகலத்தில் இருந்தாரு!

நாட்டுப் பற்றை ஊட்டுகின்ற
நல்ல அறிவுரையைத் தந்தாரு!
முன்னேற்றப் பாதையில் செல்ல
முழு மூச்சாய் உழைத்தாரு!
அமைதி வழியில் நடக்க
அரிய கொள்கைகளைக் கொடுத்தாரு!
ஆற்றலுடன் நாமிருக்க
அகிலத்தில் சிறந்தாரு!

நேரு வழியில் நடந்திடுவோம்
நேர்மையில் கலந்திடுவோம்!
நாட்டுக்காக உழைத்திடுவோம்
நற்பணிகளைச் செய்திடுவோம்!
 

(நவ14 - மறைந்த பிரதமர் ஜவஹர்லால் நேரு பிறந்தநாள்)

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.