யானையும் புலிகளும்...

அந்த அடர்ந்த வனத்தில் ஓரிடத்தில் குளம்போல் தண்ணீர் நிறைந்து இருந்தது. பாதையில் கிளைகளை ஓடித்து தழைகளை நின்றுகொண்டே வந்த யானை தண்ணீர் குடிக்கலாம் என்று குளத்தருகே சென்றது.
யானையும் புலிகளும்...
Published on
Updated on
1 min read


அந்த அடர்ந்த வனத்தில் ஓரிடத்தில் குளம்போல் தண்ணீர் நிறைந்து இருந்தது. பாதையில் கிளைகளை ஓடித்து தழைகளை நின்றுகொண்டே வந்த யானை தண்ணீர் குடிக்கலாம் என்று குளத்தருகே சென்றது.

எதிர்பக்கத்திலிருந்து இரு புலிகள் வந்து கொண்டிருந்தன. அவை யானையைப் பார்த்ததும் அதற்கு மகிழ்ச்சி பிடிபடவில்லை.  இரண்டும் சேர்ந்து யானையைக் கொன்றால், பல நாள் பசியைப் போக்கிக் கொள்ளலாம் என்று நினைத்தன.

புலிகளைக் கண்ட யானை தண்ணீருக்குள் இறங்கியது. புலிகள் பின்னாலேயே சென்றன.

யானை முதுகு மூழ்கும் அளவுக்கு தண்ணீரில் சென்று இருந்த புலிகளும் வரட்டும் என்று கரையில் காத்திருந்தன. சிறிது நேரம் புதரில் ஒதுங்கியிருந்தன.

யானையும் கரைக்கு வந்தது. புலிகள் இரண்டும் அதைக் கடிக்க பாய்ந்தன. யானை சுற்றிச் சுற்றி வந்து தும்பிக்கையில் புலிகளை அடித்து விரட்டியது. இருப்பினும், புலிகள் விடவில்லை.

யானையை எந்த விலங்கும் முன்பக்கம் தாக்க இயலாது எனவே, இரண்டு புலிகளும் யானையின் பின்பக்கமாகச் சென்று, யானையின் முதுகில் ஏறிவிட்டன.

யானை சுற்றிச் சுற்றி வந்தும் ஏதுவும் செய்ய இயலவில்லை. ஒரு புலி, யானையின் தலையைக் கடிக்க,  மற்றொன்று முதுகை தாக்கத் தொடங்கின. யானையால் ஒன்றும் செய்ய இயலவில்லை. 

சுற்றும் முற்றும் பார்த்த யானை ஒரு பெரிய மரத்தின் ஒரு கிளையானது, யானையின் முதுகுக்கு மேல் ஒரு அடி உயரத்தில் வளைந்திருந்தது.  உடனே யானை மரத்தருகே ஓடியது. அப்போது, மரக்கிளை பட்டு இரு புலிகளும் கீழே விழுந்து, அடிபட்டன.  பலத்த காயமுற்ற புலிகள் இரண்டும் தட்டுத் தடுமாறி எழுந்து நடந்தன. ஆனால், யானை கம்பீரமாக நடந்து சென்றது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com