தங்கம் விலை சவரனுக்கு ரூ. 1,600 உயர்வு! வெள்ளி கிலோ ரூ. 10,000 உயர்ந்தது!பனையூரில் தவெக வேட்பாளர்களுடன் விஜய் சந்திப்பு!புதுச்சேரி சிறுமி பாலியல் கொலை வழக்கில் தீர்ப்பு! மே 1: ஞாயிறு அட்டவணைப்படி மெட்ரோ ரயில் இயக்கம்!
/

தெரியுமா?

உலகப் புகழ் பெற்ற எழுத்தாளர் ஜே.கே.ரௌலிங் எழுதிய "ஹாரிபார்ட்டர் அன் தி ஃபிலாஸபர்ஸ் ஸ்டோன்' கதை முதல் பதிப்பில் 500 பிரதிகள்தான் 1997இல் அச்சிடப்பட்டன.

News image
Updated On :19 ஆகஸ்ட் 2023, 6:30 pm

உலகப் புகழ் பெற்ற எழுத்தாளர் ஜே.கே.ரௌலிங் எழுதிய "ஹாரிபார்ட்டர் அன் தி ஃபிலாஸபர்ஸ் ஸ்டோன்' கதை முதல் பதிப்பில் 500 பிரதிகள்தான் 1997இல் அச்சிடப்பட்டன. அந்த 500 பிரதிகளில் ஒன்று ரூ.11 லட்சத்துக்கு (இந்திய மதிப்பில்) ஏலம் போனது.  இதை வாங்கியவர் மறதியாக எங்கோ வைத்துவிட்டு செல்ல, அது அண்மையில் கண்டெடுக்கப்பட்டது. அப்போது ஒரு நூலின் விலை ரூ.32.

சான்ஃபிரான்ஸிஸ்கோ விமான நிலையத்தில் ஒரு பூனை அண்மையில் பணி அமர்த்தப்பட்டது. விமானத்தைப் பிடிக்க வரும் பயணிகள் டென்ஷனில் இருக்கிறார்கள். அவர்களிடம் இந்தப் பூனை பழகும்போது,  அவர்கள் சகஜ நிலைக்குத் திரும்புகிறார்கள்.  முதன்முதலில் கலிஃபோர்னியா விமான நிலையத்தில்தான் 2013ஆம் ஆண்டில் ஒரு நாய் பணிக்கு அமர்த்தப்பட்டது. பின்னர், ஒவ்வொரு செல்லப் பிராணிகளாகப் பணியில் அமர்த்தப்பட்டு வருகின்றன.

தூக்கக் கலக்கமாகவும் உற்சாகமின்மையாகவும் இருக்கும்போது, புத்துணர்வைப் பெற நாம் குடிப்பது காபியை.  ஆனால், காபியைவிட ஆப்பிள் புத்துணர்வை அளிப்பதாக அண்மையில் கண்டறியப்பட்டுள்ளது.  காபியில் இல்லாத கார்போஹைட்ரேட், நார்ச்சத்து, வைட்டமின் சி, தாதுக்கள் ஆப்பிளில் இருப்பதுதான் புத்துணர்வுக்குக் காரணம்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.