தில்லியில் மிக மோசமாக ஒழுங்கமைக்கப்பட்ட ஏஐ மாநாடு! ஆந்த்ரோபிக் சிஇஓ விமர்சனம்!டெலிகிராம் தடைக்கு எதிரான மனு உயர்நீதிமன்றத்தில் தள்ளுபடி!தவெக நம்பிக்கை வாக்கெடுப்பு வழக்கு: உச்ச நீதிமன்றம் தள்ளுபடிமேக்கேதாட்டு அணைக்கு எதிரான தீர்மானம் ஒருமனதாக நிறைவேற்றம்! மேக்கேதாட்டு அணை! தமிழ்நாடு அரசுக்கு திமுக உறுதுணையாக இருக்கும்! உதயநிதி ஸ்டாலின்மேக்கேதாட்டு அணைக்கு எதிரான தீர்மானம்! தேமுதிக, பாமக ஆதரவு!மேக்கேதாட்டு அணை கட்ட முயற்சிக்கும் கர்நாடக அரசுக்கு கண்டனம்! அமைச்சர் ராஜேஷ்
/

பொன்மொழிகள்

வாழ்க்கைப் பந்தயத்தில் ஓடிக் கொண்டே இருந்தால்தான் ஓரிடத்தில் நிற்க முடியும்.

News image
Updated On :26 பிப்ரவரி 2023, 5:28 pm IST

வாழ்க்கைப் பந்தயத்தில் ஓடிக் கொண்டே இருந்தால்தான் ஓரிடத்தில் நிற்க முடியும்.

மகிழ்ச்சி தேடி வர வேண்டும். வெற்றியை  தேடி பெற வேண்டும்.

சுருதி சேராத பாட்டும் உறுதி இல்லாத உள்ளமும் பயனற்றுப் போகும்.

அழுகை மகிழ்ச்சியைத் தருவது குழந்தை பிறக்கும்போது மட்டுமே!

நாமாகத் தேடும் உறவு நட்பு. தானாகத் தேடிவரும் நட்பு உறவு.

கால்பந்து விளையாட்டில் கோல்கள் போட கால்கள் வேண்டும். கோலைத் தடுக்க கைகள் வேண்டும்.

வெற்றியை மட்டுமே எதிர்பார்ப்பவன் தோல்வியை அடைவான்.

ஒத்திகை இல்லாத நாடகம் வாழ்க்கை நாடகம்தான்.

உப்பு கரிக்கத்தான் செய்யும். உண்மை கசக்கத்தான் செய்யும்.

வம்பு பேச விஷயம் தேவை இல்லை. விஷயம் உள்ளவன் வம்பு பேசுவதில்லை.

பலத்த புயலில் கனத்த மரமும் வீழ்ந்துவிடும். துணிந்த மனமும் துவண்டு விடும்.

இரைச்சல் இல்லாத சந்தையும் இன்னல் இல்லாத வாழ்க்கையும் இல்லை.

பணமும் குணமும் சேருவதில்லை. பசியும் ருசியும் சேருவதில்லை.

திருத்தப்படாத தவறுகள் வருத்தப்பட வைக்கும்.

எல்லோரும் பார்க்கிறார்கள். சிலரே கூர்ந்து பார்க்கிறார்கள். சிலரே காது கொடுத்து கேட்கிறார்கள். சிலரே மனம் திறந்து பேசுகிறார்கள்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.