சென்னையில் பதுக்கி வைத்திருந்த 40 சிலிண்டா்கள் பறிமுதல்!புனேவில் 4 வயது குழந்தையை பாலியல் வன்கொடுமை செய்து கொன்ற முதியவர்!மணிப்பூரில் 23 சட்டவிரோத பதுங்கு குழிகளை அழித்த பாதுகாப்புப் படையினர்!தேர்தல் முடிவுகள் வெளியாகும் நேரத்தில் பேசுபொருளாகும் ஜோதிமணி ட்வீட்!கட்டாய வெற்றிக்கான தேவையுடன் இன்று மோதும் சென்னை - மும்பைஈரான் புதிய சமரசத் திட்டம்: திருப்தியில்லை என டிரம்ப் நிராகரிப்புமேற்கு வங்கத்தின் 15 வாக்குச்சாவடிகளில் இன்று மறு வாக்குப் பதிவு
/

பொங்கலைப் பாடுவோம்!

பொங்கல் அன்று புதியதாகும்பல்லோர் இல்லமே!

News image
Updated On :15 ஜனவரி 2023, 12:30 am

பொங்கல் அன்று புதியதாகும்
பல்லோர் இல்லமே!
மஞ்சள் கிழங்கு மண்ணில் பானை
மணக்கும் பொங்கலே!
செங்க ரும்பும் செழித்த தழையும்
சிரிப்பு காட்டுமே!
எங்கும் மக்கள் வாழ்த்து சொல்லி
எழிலாய்ச் செல்வரே!
பொங்கல் தினத்தின் முன்னால் வருமே
போகிப் பண்டிகை!
எங்கள் வீட்டின் முன்னாள் எரிப்போம்
பழைய பொருளினை!
பொங்கல் அடுத்து பின்னால் வருமே
மாட்டுப் பொங்கலே!
அங்கும் இங்கும் காளை கழுத்தில்
ஒலிக்கும் மணிகளே!
பொங்க லன்று பகல வனையே
போற்றி மகிழ்வோம்!
புதிய வண்ண ஆடை யணிந்து
பெரியோரை வணங்குவோம்!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.