அறிவோமா..
காஷ்மீர் முதல்வராக இருந்த ஷேக் அப்துல்லா செய்த மிகப் பெரிய சாதனை "உழுபவனுக்கே நிலம் சொந்தம்' என்ற சட்டத்தை 1950ஆம் ஆண்டின் தொடக்கத்திலேயே நிறைவேற்றி, வேளாண் நிலத்தைப் பிரித்து அளித்ததுதான்.


காஷ்மீர் முதல்வராக இருந்த ஷேக் அப்துல்லா செய்த மிகப் பெரிய சாதனை "உழுபவனுக்கே நிலம் சொந்தம்' என்ற சட்டத்தை 1950ஆம் ஆண்டின் தொடக்கத்திலேயே நிறைவேற்றி, வேளாண் நிலத்தைப் பிரித்து அளித்ததுதான்.
மேற்கு வங்கத்தைச் சேர்ந்த மக்களவை முன்னாள் தலைவர் சோம்நாத் சட்டர்ஜி, 10 முறை மக்களவைக்குத் தேர்வு செய்யப்பட்டவர்.
சுதந்திரத்துக்கு முன்னர் பத்து கல் தொலைவுக்குக் கூட அஞ்சல் நிலையங்கள் இருந்திடாத நிலை. புறாவிடம் கடிதம் கொடுத்து அனுப்புவதைப் போல், அப்போது "போஸ்டர் ரன்னர்கள்' இருந்தனர். தோளில் அஞ்சல் பையைச் சுமந்துகொண்டு யாரும் வந்து தங்களைத் தாக்கிவிடாமல் இருக்க குத்துக்கோலை ஒரு கையில் ஏந்தி ஓடியவர்கள்தான் இவர்கள்.
எகிப்திய மம்மியில் 5 ஆயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்ட ஒரு குழந்தையின் சடலம் தைலத்தில் வைக்கப்பட்டிருந்தது. அதன் மீது இருந்த இலையில் ஆங்கிலத்தில் எழுதப்பட்ட கவிதை , ""இறந்த குழந்தையோ மிகவும் சிறியது; அடைந்த துயரமோ மிகவும் பெரியது'' என்பதாகும்.
முன்னாள் மத்திய அமைச்சர் சி.சுப்பிரமணியம் ஒருமுறை கூறும்போது, ""எனக்கும் ஜெகஜீவன்ராமுக்கும் ஒரு ஒற்றுமை உண்டு. நான் ஒரு பதவியில் இருப்பேன். பின்னர், அந்தப் பதவிக்கு ஜெகஜீவன்ராம் வருவார். நான் தொடங்கிய பணிகளை நான் நினைத்ததுபோலவே செய்வார். அந்தப் பணிக்கும் எனக்கும் சிறப்பு சேர்ப்பார். நான் வேளாண் அமைச்சராக இருந்தபோது, பசுமைப்புரட்சி தொடங்கியது. எனக்குப் பின்னர் அந்தப் பதவிக்கு வந்த ஜெகஜீவன்ராம் அந்தப் பணியை நேர்த்தியாகச் செய்தார்'' என்றார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...