தெரியுமா?
ரிசர்வ் வங்கியின் வெளியிட்ட உயர்ந்த மதிப்பு நோட்டு ரூ.10 ஆயிரமாகும். 1938-ஆம் ஆண்டு புழக்கத்தில் விடப்பட்ட ரூ.ஆயிரம், ரூ.10 ஆயிரம் நோட்டுகள் 1946-ஆம் ஆண்டில் விலக்கிக் கொள்ளப்பட்டன.


ரிசர்வ் வங்கியின் வெளியிட்ட உயர்ந்த மதிப்பு நோட்டு ரூ.10 ஆயிரமாகும். 1938-ஆம் ஆண்டு புழக்கத்தில் விடப்பட்ட ரூ.ஆயிரம், ரூ.10 ஆயிரம் நோட்டுகள் 1946-ஆம் ஆண்டில் விலக்கிக் கொள்ளப்பட்டன. 1954-இல் ரூ.ஆயிரம், ரூ.5 ஆயிரம், ரூ.10 ஆயிரம் நோட்டுகள் வெளிவந்து, அவை 1978-இல் மீண்டும் விலக்கிக் கொள்ளப்பட்டன.
தென் பசிபிக் பெருங்கடலில் ஒய்யாரமாக வீற்றிருக்கின்றன குக் தீவுகள். 15 தீவுகளை உள்ளடக்கிய இந்தத் தீவுக் கூட்டம் 240 சதுர கி.மீ. பரப்பளவில் விரிந்துள்ளது. சுமார் 18 ஆயிரம் பேர் மட்டுமே இங்கு வசிக்கின்றனர். ஆனால், ஆண்டுதோறும் லட்சக்கணக்கில் சுற்றுலாப் பயணிகள் வந்து செல்கின்றனர். இந்தத் தீவின் பாதுகாப்பு, வெளியுறவு போன்றவை நியூஸிலாந்து நாட்டின் பொறுப்பில் இருக்கிறது.
பெண்களைக் காட்டிலும் ஆண்கள் வேகமாக நடக்கும் சுபாவம் கொண்டவர்கள். பெண்களுடன் சேர்ந்து நடக்கும்போது, மெதுவாக நடப்பார்கள். அந்தப் பெண் வாழ்க்கைத் துணையாக இருந்தால் மட்டுமே ஆண்கள் நடக்கும் வேகம் குறையும். அந்தப் பெண் தோழியாகவோ அல்லது அறிமுகமான வேறு நபராக இருந்தாலோ ஆண்களின் வேகம் அதிகரித்துவிடும் என்று ஆய்வு ஒன்று கூறுகிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...