ஏழு வயதில் கின்னஸ் சாதனை

சென்னை அரும்பாக்கத்தைச் சேர்ந்த  வேதாத்ரேயன் என்ற ஏழு வயது சிறுவன் கின்னஸ்  சாதனையை நிகழ்த்தியிருக்கிறார்.
ஏழு வயதில் கின்னஸ் சாதனை


சென்னை அரும்பாக்கத்தைச் சேர்ந்த வேதாத்ரேயன் என்ற ஏழு வயது சிறுவன் கின்னஸ் சாதனையை நிகழ்த்தியிருக்கிறார்.
இடுப்பில் இரும்பு வளையங்களை வேகமாகச் சுற்றுவது சர்க்கஸில்தான் நடக்கும். கழுத்தில் வளையங்களைப் போட்டுக் கொண்டு சுற்றி கின்னஸ் சாதனையை நிகழ்த்தியிருக்கும் அவர் இதுகுறித்து கூறியதாவது:
'நான் இரண்டாம் வகுப்பு மாணவன். மூன்று வயதிலிருந்தே அப்பா கோகுல்நாத் செய்வதைப் பார்த்து பழகினேன். ஒரு நிமிடத்தில் இரும்பு வளையத்தை கழுத்தில் இட்டு அதிவேகத்தில் நடுவர்கள் முன் ஒரு நிமிடம் சுற்ற வேண்டும். இதை ஆங்கிலத்தில் "ஹுலா ஹூப் ரொட்டேஷன்' என்பார்கள். இதுவரை ஒரு நிமிடத்தில் 174 தடவைகள் வளையத்தைச் சுற்றியதுதான் கின்னஸ் சாதனையாக இருந்தது. நான் 196 தடவைகள் சுற்றி முந்தைய சாதனையை முறியடித்தேன். இந்தச் சாதனையை மார்ச் 19இல் நான் நிகழ்த்தினாலும், சான்றிதழ் தற்போது கிடைக்கப் பெற்றது.
கழுத்தில் வளையம் வேகமாகச் சுழலும்போது எத்தனை முறை சுழன்றது என்று எண்ணுவது சிரமம். அதனால் வளையத்தில் சின்ன ரிப்பனை அடையாளமாக வைப்பார்கள். வளையம் சுழலுவதை படம் பிடித்து பிறகு ஸ்லோ மோஷனில் படத்தை ஓடச் செய்து ரிப்பன் அடையாளம் முழு வட்டம் சுற்றி வருவதை வைத்து ஒரு நிமிடத்தில் எத்தனை முறை வளையம் சுழன்றது என்று நடுவர்கள் நிர்ணயிப்பார்கள்.
இது எனது இரண்டாவது கின்னஸ் சாதனை ஆகும். இதற்கு முன் நானும் அப்பா கோகுல்நாத்தும் இணைந்து வளையங்களைச் சுற்றுவதை வேறு விதத்தில் 2021இல் செய்தோம். அது குழுவாக செய்த சாதனை.
சின்னத் திரை நடிகரான கோகுல்நாத், 9 கின்னஸ் சாதனைகளை நிகழ்த்தியிருக்கிறார். அவர் நடத்தும் பயிற்சி நிலையத்துக்காக, பயிற்சியாளர்களுக்கு பயிற்சி அளித்து 27 கின்னஸ் சாதனைகளை நிகழ்த்த வைத்திருக்கிறார்'' என்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com