தங்கம் விலை சவரனுக்கு ரூ. 1,600 உயர்வு! வெள்ளி கிலோ ரூ. 10,000 உயர்ந்தது!பனையூரில் தவெக வேட்பாளர்களுடன் விஜய் சந்திப்பு!புதுச்சேரி சிறுமி பாலியல் கொலை வழக்கில் தீர்ப்பு! மே 1: ஞாயிறு அட்டவணைப்படி மெட்ரோ ரயில் இயக்கம்!
/

தெரியுமா?

கறுப்பு இல்லாத காக்கையை பார்க்க முடியாது. அதுபோல், உடம்பில் புள்ளி இல்லாத ஒட்டகச் சிவிங்கியைப் பார்ப்பது அரிது.

News image
Updated On :24 செப்டம்பர் 2023, 12:46 pm

கறுப்பு இல்லாத காக்கையை பார்க்க முடியாது. அதுபோல், உடம்பில் புள்ளி இல்லாத ஒட்டகச் சிவிங்கியைப் பார்ப்பது அரிது.  புள்ளி இல்லாத ஒட்டகச் சிவிங்கி ஒன்று அமெரிக்காவின் டென்னஸி மாகாணத்தில் உள்ள ஒரு உயிரினப் பூங்காவில் அண்மையில் பிறந்தது. இதற்கு முன்னர் 1972-இல் டோக்கியோவில் இப்படிப்பட்ட ஒட்டகச் சிவிங்கி பிறந்துள்ளது.

மகாராஷ்டிராவைச் சேர்ந்த "லஸவ் காவ்' என்ற ஊரின் வெங்காய மார்க்கெட்டில் பெரிய வெங்காய உருவச் சிலை அமைக்கப்பட்டுள்ளது. ஆசியாவிலேயே மிகப் பெரிய வெங்காய மார்க்கெட் இது.

நமது உடல் 30 நிமிடங்களில் உருவாக்கும் வெப்பத்தைக் கொண்டு அரை கேலன் தண்ணீரை கொதிக்க வைக்க முடியும்.

உலகம் முழுவதும் ஆண்டுக்கு 100 பில்லியன் ஆயத்த ஆடைகள் தயாரிக்கப்படுகின்றன.  இதன்படி, 92 மில்லியன் டன் துணிகள் எறியப்படுகின்றன.

1950-ஆம் ஆண்டில் இருந்து 2014-ஆம் ஆண்டு ஜூன் வரை வாழ்ந்த இசைக்கலைஞர்களின் ஆயுள்காலத்தை ஆய்ந்தபோது, அவரவர் நாட்டு மக்களின் சராசரி ஆயுள்காலத்தைவிட இசைக்கலைஞர்கள் 25 ஆண்டுகள் குறைவாகவே வாழ்வது தெரியவந்துள்ளது.

புவி வெப்பமயமாவதால் உலகின் பனி (ஐஸ்) ஆண்டுதோறும் 1.2 ட்ரில்லியன் டன் குறைந்துவருகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.