/

விடுதலைக் காவலன்

காந்தி தந்த சுதந்திரம்காத்து நிற்றல் வேண்டும்! அதைக் காத்து நிற்கும் காவலன்

News image
Updated On :30 செப்டம்பர் 2023, 6:30 pm

எஸ். ஆர். ஜி. சுந்தரம்

காந்தி தந்த சுதந்திரம்
காத்து நிற்றல் வேண்டும்! அதைக் 
காத்து நிற்கும் காவலன்
கண்ணா நீயே அறியணும்!

நாட்டின் மீதும் நமக்கு 
நிறைந்த பற்றும் இருக்கணும் காந்தி
காட்டும் வாழ்வை நன்கு
கற்று நாளும் நடக்கணும்!

அன்பு, நேர்மை, உண்மை,
ஒழுக்கம், தவறா உள்ளம்
என்றும் எவரும் சோதரர்
எவர்க்கும் தீமை எண்ணாமை!

நாளும் தீயன நாடாமை
நன்றாய் இவற்றை நீ பழகின்
நாளை நீயும் நாடாள்வாய்
நமது விடுதலைக் காவலனாய்!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.