பொன்மொழிகள்...

வாழ்க்கை வழிகாட்டும் வாசகங்கள்
பொன்மொழிகள்...

தேவையானதைத் தேட மறுத்து தேவையற்றதைத் தேடும் மனித வாழ்க்கைக்கு ஒருவர் தரும் விலை நிம்மதி.

-கே.ராமநாதன், மதுரை.

காயங்களின்றி காலம் எதையும் கற்றுக் கொடுப்பது இல்லை.

-ந.சண்முகம், திருவண்ணாமலை.

ரத்ததானம் செய்; அதை சாலையில் செய்யாதே!

-ஏ.மூர்த்தி, திருவள்ளூர்.

ஆடம்பரம் என்பது பலியான வறுமை. மனநிறைவு என்பது வற்றாத செல்வம்.

-ஏ.எஸ்.கோவிந்தராஜன், சென்னை.

வேலைக்கு மிகவும் பாதுகாப்பான மருந்து பயனுள்ள வேலையில் ஈடுபடுவதே!

-மு.பெரியசாமி, விட்டுக்கட்டி.

இருப்பிடங்கள்தான் செங்கற்களால் கட்டப்பட வேண்டும். இல்லங்கள் இதயங்களால் உருவாக்கப்பட வேண்டும். தடம் பார்த்து நடப்பவன் மனிதன்; தடம் பதித்து நடப்பவன் மாமனிதன்.

-அ.யாழினி பர்வதம், சென்னை.

நமக்கானது எதுவும் நம்மைவிட்டு போகாது. நம்மைவிட்டு போனால் அது நமக்கானது அல்ல.

பாதை இல்லையே என்று கவலைப்படாதே! நீ நடந்தால் அதுவே ஒரு பாதை.

-நெ.இராமகிருஷ்ணன், சென்னை.

உடையாதவரைதான் எதையும் ரசிக்கலாம். உடைந்(த்)து ஓட்டிவைத்தால் சகித்துகொள்ளலாம். ரசிக்க முடியாது!

-பி.கோபி, கிருஷ்ணகிரி.

நீ முயற்சி செய்யும்போது வீண் முயற்சி என்று சொல்லும் இந்த உலகம் நீ வெற்றிபெற்றுவிட்டால் விடாமுயற்சி என்று சொல்லும்.

-ஜி.அர்ஜுனன், செங்கல்பட்டு.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com