குட்டீஸ் கவனியுங்க...

குட்டீஸ் கவனியுங்க...
Published on
Updated on
1 min read

சேமிப்பு மூன்றுவிதமாக இருக்க வேண்டும். சோறு- இன்றைய தேவை. அரிசி- நாளைய தேவை. விதை நெல்- எதிர்காலத் தேவை.

-பத்மா சாரதி, தஞ்சாவூர்.

விதைத்த பின்பும் விழிப்போடிரு. வாழ்வு வளமாகும்.

-மா.திவாகர், மரத்துறை.

உணர்ச்சிக்கு முதலிடம் கொடுக்காமல், உழைப்புக்கு முதலிடம் கொடுத்தால் வாழ்க்கை உன்னதமாக இருக்கும்.

-கல்கி, சிதம்பரம்.

வாழ்க்கை விசித்திரமான புத்தகம். நேற்றைய பக்கத்தைத் திரும்பிப் பார்க்கலாம். ஆனால், நாளைய பக்கத்தைப் புரட்டிப் பார்க்க முடியாது.

-முனைவர் ச.உமாதேவி, திருவண்ணாமலை.

இளமையில் தகப்பனையும், முதுமையில் மனைவியும் ஓர் ஆண் இழக்கக் கூடாத சொத்துகள்.

மனத் திருப்தி உள்ளவன் ஏழ்மையிலும் செல்வந்தன்தான்.

-ந.சண்முகம், திருவண்ணாமலை.

பொய் சொல்வது கேவலம். பொய்யை நம்புவது அதைவிட கேவலம்.

சோம்பேறிக்கும் கூலி உண்டு. அதுதான் வசைமொழி.

-மு.பெரியசாமி, விட்டுக்கட்டி.

சோம்பலோடு கூட்டணி வைக்காதே. தோல்விக் கோட்டையை ஆட்சி செய்யாதே.

அடுத்தவனை அழிக்க நினைத்தால் நீயே அழிந்துவிடுவாய்.

ஏ.மூர்த்தி, திருவள்ளூர்.

கழட்டிவிட்டு போனாலும் காத்திருப்பது செருப்பு மட்டும்தான்.

-நெ.இராமகிருஷ்ணன், சென்னை.

போட்டிப் போடுவோரிடம் போட்டி போடலாம். பொறாமைப்படுவோரிடம் விலகிப் போகலாம்.

-அ.ரவீந்திரன், குஞ்சன்விளை.

தொட்டில் பழக்கம் சுடுகாடு வரை என்பது தவறு. மணமான பின் மாறும் என்பதே சரி.

-ஜி.அர்ஜுனன், செங்கல்பட்டு.

நடக்க வேண்டிய இடத்துக்கு வண்டியில் சென்றால் உடல் நலமில்லை.

வண்டியில் செல்ல வேண்டிய இடத்துக்கு நடந்து போனால் பண நலம் இல்லை.

-பி.கோபி, கிருஷ்ணகிரி.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com