மதுரை மீனாட்சி அம்மன் கோயிலைக் கட்டி முடிக்க 120 ஆண்டுகள் ஆயின.
திருமலை நாயக்கர் மகாலைக் கட்டி முடிக்க 23 ஆண்டுகள் ஆயின.
ஜி.யு.போப் 75 வயதைக் கடந்தவுடன் திருவாசகத்தை மொழிபெயர்க்கத் தொடங்கினார். 656 பாடல்களை 5 ஆண்டுகளில் மொழியாக்கம் செய்து, 1900 ஏப். 24-இல் தனது 80-ஆவது வயதில் நூலாக வெளியிட்டார். சாதனைகளுக்கு வயது தடையில்லை.
இரண்டு நாடுகளுக்கு நடைபெற்ற மிகச் சிறிய போர் 1896-இல் நிகழ்ந்தது. இங்கிலாந்தும் சான்சிபார் நாடும் 38 நிமிடங்களில் போரை முடித்துவிட்டன.
மனித மூளையால் 90 ஆயிரம் கோடி சொற்களை நினைவுப்படுத்த முடியும். உடலில் வலி ஏற்பட்டால் அதை உணர்த்துவதும் மூளைதான். ஆனால், மூளையில் ஏதேனும் காயம் ஏற்பட்டால், அந்த வலியை உணரும் சக்தி அதற்கு கிடையாது.
இலையின் ஐந்து பருவங்கள்: குழந்தைப் பருவம்- கொழுந்து, இளமைப் பருவம்- தளிர், காதல் பருவம்0- இலை, முதுமைப் பருவம்- பழுப்பு, இறுதிப் பருவம்- சருகு.
கங்காரு தனது கைகளால் சண்டை போடும்.
யானை குறட்டைவிட்டு தூங்கும்.
தொல்காப்பியம் தோன்றுவதற்கு 4 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே யாழ் உருவானது. 5 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே ஹரப்பா நாகரிகத்தில், யாழ் காணப்படுகிறது. 21 நரம்புகளைக் கொண்ட பேரி யாழ், 17 நரம்புகளைக் கொண்ட மகரயாழ், 16 நரம்புகளைக் கொண்ட ககோடயாழ், 7 நரம்புகளைக் கொண்ட செங்கோட்டி யாழ் என்று பலவகைகளில் இவை காணப்படுகின்றன.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.