
தகவல் தொடர்பு, வழி செலுத்துதல், ராணுவக் கண்காணிப்பு, அறிவியல் ஆராய்ச்சி பல நோக்கங்கள் சார்ந்து விண்ணில் சுமார் 13,000 செயற்கைக்கோள்கள் பூமியைச் சுற்றி வலம் வருகின்றன.
இந்த ஆண்டு மட்டும் இதுவரை 125 செயற்கைக்கோள்கள் விண்ணில் ஏவப்பட்டுவிட்டன. இவை புவிசார் நிலை, நடுத்தரப் பூமி, குறைந்த சுற்றுப் பாதைகளில் நிலை நிறுத்தப்பட்டு வலம் வருகின்றன.
தற்போது 105 நாடுகள் அல்லது பன்னாட்டு நிறுவனங்களால் பதிவு செய்யப்பட்டு, செயற்கைக்கோள்கள் அனுப்பப்பட்டு வருகின்றன.
மேலும் மேலும் ஏவப்படும்போது ஒன்றை ஒன்று மோதிக் கொள்ளுமா? என்று பொருத்திருந்து தான் பார்க்க வேண்டும்.
மிக செயற்கைக் கோள்களை அனுப்பியுள்ள நாடுகள்:
அமெரிக்கா-8,530 (உலகளாவிய இணையச் சேவைக்காக மட்டும் 7,400),
ரஷியா-1559 (2036-க்குள் 2600ஆக உயர்த்தத் திட்டம். 35 % வணிக ரீதியானது),
சீனா-906,
யூ.கே.-763,
ஜப்பான்-203,
பிரான்ஸ்-100,
இந்தியா-136 (புவிசார் நிலையில் 32-ம்,
நடுத்தர நிலையில் 22-ம் இயங்கி வருகின்றன. அடுத்த 3 ஆண்டுகளில் பாதுகாப்பு, கால நிலை கண்காணிப்பு, டிஜிட்டல் இணைப்புக்காக இந்தியா 100 முதல் 150 செயற்கைக்கோள்களை புதிதாக விண்ணில் ஏவ உள்ளது.)
ஜெர்மனி-82,
இ த்தாலி-66,
கனடா-64.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.