முயலே முயலே ஓடிவா
முன்னே குதித்து தாவிவா
அழகுக் கண்ணை காட்டிவா
அமைதி ஒளியை ஏற்றிவா
முயல ஊக்கம் தந்திடும்
முயலே உனது பேரழகு
துள்ளித் தாவும் உனதழகு
தொட்டும் உள்ளம் பேரழகு
புசுபுசு புசுபுது உன்உடலு
புசிக்கும் கேரட் கொரிப்பழகு
உனது ஓட்டம் சுறுசுறுப்பு
உனது தேடல் குறுகுறுப்பு
வசீகரன், தேனாம்பேட்டை.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.