இந்தியாவின் கிரிக்கெட் ஜாம்பவான்கள் மைதானத்தில் மட்டுமல்ல; திறமையான தொழில்முனைவோர்களாகவும் முதலீட்டாளர்களாகவும் மின்னுகின்றனர். கிரிக்கெட் மூலம் வரும் வருவாய், விளம்பரங்கள் மூலம் வரும் வருவாய், பிராண்ட் ஒப்புதல்கள், வணிகத்தில் முதலீடுகள் அனைத்தும் அடங்கும்.
2025 மே மாத நிலவரப்படி கிரிக்கெட் வீரர்களில் அதிக சொத்துகளுக்குச் சொந்தக்காரர் விராட் கோலி. இவரது சொத்து மதிப்பு ரூ.2,080 கோடி. இரண்டாவது இடத்தில் இருப்பவர் சச்சின் டெண்டுல்கர். இவரது சொத்து மதிப்பு ரூ. 1,250 கோடி.
ரூ.1,100 கோடி சொத்துகளுடன் மூன்றாம் இடத்தில் எம்.எஸ். தோனியும், ரூ. 700 கோடி சொத்துகளுடன் சௌரவ் கங்குலி நான்காம் இடத்திலும், ரூ.400 கோடி சொத்துகளுடன் யுவராஜ் சிங் ஐந்தாம் இடத்திலும் உள்ளனர்.
ரூ. 350 கோடி சொத்துகளுடன் ஆறாம் இடத்தில் விரேந்தர் சேவாக்கும், ரூ.325 கோடி சொத்துகளுடன் ரோஹித் ஷர்மா ஏழாம் இடத்திலும், ரூ.320 கோடி சொத்துகளுடன் ராகுல் திராவிட் எட்டாம் இடத்திலும், ரூ.265 கோடியுடன் கெளதம் கம்பீர் ஒன்பதாம் இடத்திலும் உள்ளனர். பத்தாம் இடத்தில் உள்ள சுரேஷ் ரைனாவின் சொத்து மதிப்பு ரூ.215 கோடி. இப்படி பட்டியல் நீளுகிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.