ஆர்.எஸ்.
இத்தாலி நாட்டின் மக்கள் ஆன்மிக வாழ்க்கை முறைக்கு அதிகம் கவனம் கொடுத்துவந்த நிலைமை இன்றில்லை. அவர்கள் பாரம்பரிய உணவுகளை கைவிட்டு, நாகரிக, துரித உணவுமுறைக்கு மாறிவிட்டனர். இதனால், உடல் பருமன் கொண்ட சிறுவர்களின் எண்ணிக்கை இத்தாலியில் அதிகரித்துள்ளது. உலகிலேயே இங்குதான் பருமனான சிறார்கள் உள்ளனர்.
பாரம்பரிய உணவு வகைகள் பின்னுக்குத் தள்ளப்பட்டு, பிஸ்ஸா, பாஸ்டா, உருளைக்கிழங்கு, புரோட்டின் உணவுகள், ரொட்டிகள் ஆகியவை அன்றாட உணவாக மாறியதுதான் இந்த நிலைமைக்குக் காரணம்.
இந்தச் சிறுவர்கள் மருத்துவ ஆலோசனைக்கு அழைத்து வரப்படுகின்றனர். பல சிறுவர்களுக்குப் பசியைக் கட்டுப்படுத்தும் ஊசிமருந்துகள் செலுத்தப்படுகின்றன. சில சிறுவர்களுக்கு அறுவைச் சிகிச்சை மூலம் இரைப்பை பாதியாகக் குறைக்கப்படுகிறது.
'பாரம்பரிய உணவுகளை குழந்தைகளுக்கு மீண்டும் அறிமுகம் செய்ய வேண்டும். அதில் சிறுவர்களுக்கு ஆர்வம் ஏற்படச் செய்வது அவசியம். இப்போதைக்கு வெறும் 10 சதவீத சிறார்கள் மட்டுமே பாரம்பரிய உணவுகளைச் சாப்பிடுகிறார்கள்' என்கிறார் டாக்டர் வால்டர் லாங்கோ. இவர் அமெரிக்காவில், தெற்கு கலிபோர்னியா பல்கலைக்கழகத்தின் ஆயுள் நீட்டிப்பு நிறுவன இயக்குநர்.
இந்த நிலைமை இந்தியாவிலும் உருவாகி வருகிறது. பாரம்பரிய உணவுகளை நம் குழந்தைகளுக்குப் பழக்கப்படுத்துவதில்லை. கம்பு, கூழ், கேழ்வரகுக் களி போன்ற சத்தான உணவுகள் இன்று மிகவும் அரிதாகிவிட்டன. ஆனால் புரோட்டின் பவுடர் அல்லது சத்துமாவு விற்பனை அதிகரித்துள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

திமுகவை தோற்கடித்த வாக்காளர்களுக்கு நல்ல சாவே வராது! சாபம் விடுகிறாரா ஆர்.எஸ். பாரதி?
பட்டாம்பூச்சி ஆய்வில் 10 வயது சிறுவன்

உதயநிதி கைது! பேரவைக் கூட்டத்தில் பங்கேற்பதைத் தடுக்கும் நடவடிக்கை: ஆர்.எஸ். பாரதி குற்றச்சாட்டு

தவறான வழிகாட்டல்
விடியோக்கள்
ரசிகர்களைக் கவர்ந்ததா மகுடம்? திரைவிமர்சனம்


