மீனாட்சி அம்மன் கும்பாபிஷேகம்: சென்னையிலிருந்து மதுரைக்கு சிறப்பு ரயில்கள் அறிவிப்பு!மதுரை மீனாட்சியம்மன் கோவில் அருகே உள்ள சென்ட்ரல் தியேட்டரில் பயங்கர தீ விபத்து! கும்பகோணம் அருகே விபத்தில் சிக்கியவர்களுக்கு காரை நிறுத்தி உதவிய அமைச்சர்! தமிழகம் முழுவதும் 4,500 செவிலியர்கள் விரைவில் நியமனம்: அமைச்சர் அருண்ராஜ் கருப்பை வாய் புற்றுநோயைக் கண்டறிய சுய-பரிசோதனைக் கருவி! மீட்சியைத் தக்கவைக்கத் தவறிய இந்திய பங்குச் சந்தை! சரிவில் நிறைவடைந்த சென்செக்ஸ், நிஃப்டி!!லண்டனிலேயே மிக உயரமான நட்சத்திர விடுதியில் தங்கியிருக்கும் முதல்வர் விஜய்! ஒரு நாள் வாடகை?அரும்புதல்வர்களுள் ஒருவரைத் தமிழ்த்தாய் இழந்துவிட்டாள்!சாலமன் பாப்பையா மறைவுக்கு ஸ்டாலின் இரங்கல்!தமிழ்கூறு நல்லுலகிற்கு பேரிழப்பு! சாலமன் பாப்பையா மறைவுக்கு முதல்வர் விஜய் இரங்கல்!

புதிய பூ!

இமயமலையில் 2,900 மீட்டர் உயரத்தில் புதிய பூ கண்டறியப்பட்டுள்ளது.

Published On :

இமயமலையில் 2,900 மீட்டர் உயரத்தில் புதிய பூ கண்டறியப்பட்டுள்ளது.

நேபாளத்தின் மியாக்டி மாவட்டத்தில், கண்டகி மாகாணத்தில் அமைந்துள்ள பேனி பகுதியில் காளி, கண்டகி, மியாக்டி நதிகள் சங்கமிக்கின்றன. பேனியிலும், அதன் சுற்றியுள்ள பகுதிகளிலிருந்தும் அன்னபூர்ணா, தெளலகிரி மலைத் தொடரின் எண்ணற்ற காட்சிகளைக் காணமுடியும்.

மலையேற்றம், நீர்வீழ்ச்சி, வெந்நீர் ஊற்று, புகழ் பெற்ற உயரமான மலைப்பகுதிகளுக்காக அணுகல் உள்ளிட்டவை இங்கு பிரசித்திப் பெற்றதாகும்.

இங்கு ஆராய்ச்சியாளர்கள் பக்த பகதூர் ரசகோட்டி, ரீட்டா ஆலே ஆகியோர் இந்தப் பூவைக் கண்டறிந்தனர். இம்பேஷியன்ஸ் பேரினத்தைச் சேர்ந்த இந்தப் பூவை நேபாளத்தில் 'தியூரி' என அழைப்பர்.

பூவுக்கு மலையேறும் நிபுணரின் பெயர்:

2019-இல் உலகின் 8 ஆயிரம் மீட்டருக்கும் மேற்பட்ட அதிக உயரமான 14 சிகரங்களை நிர்மல் நிம்ஸ்தாய் புர்ஜா 6 மாதங்கள், 6 நாள்களில் ஏறி, முந்தைய சாதனைகளை முறியடித்தார்.

2021-இல் கே-2 சிகரத்தில் குளிர்கால மலையேற்றக் குழுவில் கலந்துகொண்ட முழு நேபாள குழுவிலும் அங்கம் பெற்று சாதித்தார். இவரது பணிகளுக்காக ஐ.நா. சுற்றுச்சூழல் திட்டம் பின்னர் இவரை ஒரு மலைப் பாதுகாவலராக அங்கீகரித்தது. மேலும், இவர் நீம்ஸ்டாய் அறக்கட்டளை மூலம் உயரமான மலைப்பகுதிகளைப் பாதுகாக்கும் முயற்சிகளை மேற்கொண்டார்.

'பிக் மவுண்டென்ஸ் கிளியரிங்' திட்டத்தை முன்னெடுத்து, உலகின் மிக உயரமான சிகரங்களில் கைவிடப்பட்டு, குவிந்து கிடக்கும் ஆக்சிஜன் சிலிண்டர்கள், கயிறுகள், கூடாரங்கள், பிற உபகரணங்கள் உள்ளிட்ட பெருமளவிலான பயணக் கழிவுகளை அகற்ற முயற்சி மேற்கொண்டார்.

இவர் 2026 ஜூலை 30-இல் தனது நாற்பத்து மூன்றாம் வயதில் பாகிஸ்தானின் காரகோரம் மலைத் தொடரில் உள்ள மியாட் பீக் மலை மீது ஏறும்போது சுமார் 6,600 மீட்டர் உயரத்தில் திடீர் பனிச்சரிவில் சிக்கினார். இதில் இவர் உள்பட குழுவினரும் உயிரிழந்தனர். இந்த நிபுணரின் பெரிலேயே இந்தப் பூ 'இம்போஷியன் நிம்ஸ் பூர்ஜா' என்று அழைக்கப்படுகிறது.

-ராஜி ராதா

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.