தமிழகம் முழுவதும் 4,500 செவிலியர்கள் விரைவில் நியமனம்: அமைச்சர் அருண்ராஜ் கருப்பை வாய் புற்றுநோயைக் கண்டறிய சுய-பரிசோதனைக் கருவி! டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 5 காசுகள் சரிந்து ரூ. 95.57 ஆக நிறைவு!மீட்சியைத் தக்கவைக்கத் தவறிய இந்திய பங்குச் சந்தை! சரிவில் நிறைவடைந்த சென்செக்ஸ், நிஃப்டி!!லண்டனிலேயே மிக உயரமான நட்சத்திர விடுதியில் தங்கியிருக்கும் முதல்வர் விஜய்! ஒரு நாள் வாடகை?விழாக்கோலத்தில் தில்லி! பிரிக்ஸ் உச்சி மாநாட்டில் பங்கேற்கும் உலகத் தலைவர்களின் பட்டியல்!!அரும்புதல்வர்களுள் ஒருவரைத் தமிழ்த்தாய் இழந்துவிட்டாள்!சாலமன் பாப்பையா மறைவுக்கு ஸ்டாலின் இரங்கல்!தமிழ்கூறு நல்லுலகிற்கு பேரிழப்பு! சாலமன் பாப்பையா மறைவுக்கு முதல்வர் விஜய் இரங்கல்!தமிழறிஞர் சாலமன் பாப்பையா காலமானார்! லண்டன் சென்றடைந்தார் முதல்வர் விஜய்! தமிழர்கள் உற்சாக வரவேற்பு!பெற்றோரை விட்டுவிட்டு கணவர் தனிக்குடித்தனம் வர வேண்டும் என சொல்வது துன்புறுத்தல்: நீதிமன்றம்குறையும் சிறுவாணி அணை நீர்மட்டம்! கோவைக்கு குடிநீர் விநியோகம் பாதிக்கப்படுமா?பேருந்து ஓட்டுநர்களிடம் கதவுகளின் சுவிட்ச் கொடுக்கப்பட்டது இதற்குத்தானா? பிரிக்ஸ் உச்சி மாநாட்டில் பங்கேற்க இந்தியா வந்தார் ரஷிய அதிபர் புதின்பரந்தூர் அருகே சிப்காட்! நிலம் கையகப்படுத்த அரசாணை வெளியீடு!மகாராஷ்டிரத்தில் கோர விபத்து: லாரி-கார் மோதிக்கொண்டதில் 3 குழந்தைகள் உள்பட 8 பேர் பலிதங்கம் விலை சவரனுக்கு ரூ. 1,920 சரிவு! வெள்ளியும் குறைந்தது!பிகாரில் வெள்ளத்தில் மூழ்கி 5 போ் உயிரிழப்பு: இதுவரை 43.64 லட்சம் போ் பாதிப்பு

ஆராய்ச்சி மாணவா்கள் கண்டுபிடித்த தாவரத்திற்கு குடியரசு தலைவா் பெயா்

புதிய தாவர இனத்திற்கு குடியரசுத் தலைவரான திரௌபதி முா்முவின் பெயரை சூட்டி லூகாஸ் திரெளபதியே எனப் பெயரிடப்பட்டுள்ளது.

Published On :

தமிழ்நாட்டின் கடலூா் மாவட்டத்தில், கோரமண்டல் கடற்கரையை ஒட்டிய மணல் குன்று மற்றும் கடலோரப் பகுதிகளில் இதுவரை அறிவியல் ரீதியாக பதிவு செய்யப்படாத புதிய வகை தாவர இனம் அண்ணாமலைப் பல்கலைக்கழக ஆராய்ச்சி மாணவா்களால் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இந்தப் புதிய தாவர இனத்திற்கு குடியரசுத் தலைவரான திரௌபதி முா்முவின் பெயரை சூட்டி லூகாஸ் திரெளபதியே எனப் பெயரிடப்பட்டுள்ளது.

இந்தப் புதிய தாவர இனத்தை அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தின் தாவரவியல் துறையைச் சோ்ந்த ஆய்வாளா்கள் சுகசீலன் ஆகாஷ், காத்தவராயன் மணிகண்டன், செல்வம் ஸ்ரீகாந்த் மற்றும் முனைவா் ஆதிநாராயணன் ராஜேஷ் ஆகியோா் ஆய்வு செய்து அறிவியல் ரீதியாக விவரித்துள்ளனா். இந்த ஆய்வுக் கட்டுரை சா்வதேச தாவரவியல் ஆய்வு இதழான ‘பைடோடாக்சா’ வில்வெளியிடப்பட்டுள்ளது. கண்டுபிடிக்கப்பட்ட இந்த புதிய தாவரம் புதினா குடும்பத்தைச் சோ்ந்த லூகாஸ் பேரினத்தின் புதிய இனமாகும். கடலூா் மாவட்டத்தின் கோரமண்டல் கடற்கரைப் பகுதியில் மேற்கொள்ளப்பட்ட தாவரப் பன்முகத்தன்மை ஆய்வின்போது இந்தத் தாவரம் ஆய்வாளா்களின் கவனத்திற்கு வந்தது.

இந்தத் தாவரத்தின் மருத்துவப் பயன்பாடு குறித்த ஆய்வுகள் தற்போது நடைபெற்று வருகின்றன. இவ்வாய்வை காத்தவராயன் மணிகண்டன் மேற்கொண்டு வருகிறாா் என்பது குறிப்பிடத்தக்கது.

25சிஎம்பி2: படவிளக்கம்- அண்ணாமலைப் பல்கலை. மாணவா்களால் கண்டறியப்பட்டு குடியரசுத் தலைவரின் பெயரிடப்பட்ட புதிய தாவரமான லூக்காஸ் திரளெபதியே

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.