பிரதமர் மோடியே பீதியில் இருக்கிறார்: ராகுல் காந்தி விமர்சனம்பெட்ரோல், டீசல் தட்டுப்பாடு இல்லை! எண்ணெய் நிறுவனங்கள் விளக்கம் ஈரானுக்கு எதிராக ஐ.நா.வில் தீர்மானம்! இந்தியா ஆதரவு! போரை நிறுத்த 3 நிபந்தனைகள் விதித்த ஈரான் அதிபர்! இந்திய ரூபாயின் மதிப்பு மேலும் வீழ்ச்சி! ரூ. 92.37 ஆக சரிவு!தமிழ்நாட்டில் பாதுகாப்பு இல்லை! நாள்தோறும் கொலை, பாலியல் வன்கொடுமை! விஜய் கண்டனம்
/

நகர்வலம்: புகைப்படங்களா? ஓவியங்களா?

எல்லைப் பாதுகாப்புத் துறையில் மிக உயர்ந்த பதவி வகித்து ஓய்வு பெற்ற என் நண்பர் ஏராளமான கட்டுரைகளும், கேலிச் சித்திரங்களும், ஓவியங்களும், புகைப்படங்களும் அனுப்பிக்கொண்டே இருப்பார். "இன் - பாக்ஸில்' இவர்

News image
Updated On :20 செப்டம்பர் 2012, 9:51 am

சாருகேசி

எல்லைப் பாதுகாப்புத் துறையில் மிக உயர்ந்த பதவி வகித்து ஓய்வு பெற்ற என் நண்பர் ஏராளமான கட்டுரைகளும், கேலிச் சித்திரங்களும், ஓவியங்களும், புகைப்படங்களும் அனுப்பிக்கொண்டே இருப்பார். "இன் - பாக்ஸில்' இவர் பெயரைப் பார்த்த உடனேயே திறந்து பார்த்து விடுவேன்.

சென்ற வாரம் அவர் அனுப்பியிருந்த படங்கள் இமான் மலேகி என்ற இரான் நாட்டு ஓவியர் வரைந்தவை. "தத்ரூப சித்திரங்களின் காட்சி' என்று ஒரு தடவை இவர் ஓவியங்களைக் காட்சிக்கு வைத்திருந்தார். 1976 - ல் டெஹ்ரானில் பிறந்த இமான் மலேகி,மொர்ட்டஸô கட்டூஸியான் என்ற புகழ்பெற்ற ஓவியரோடு இணைந்து பல ஓவியங்களை வரைந்திருக்கிறார். அவரது பாணியைக் கற்றிருக்கிறார். அவர் வரைந்த சில ஓவியங்களைப் பாருங்கள். இவை புகைப்படங்களா, ஓவியமா என உங்களுக்கே வியப்பாக இருக்கும்!

இசைக் கலைஞர்கள் தங்கள் பெயருக்கு முன்னால் தங்கள் ஊரின் பெயரைச் சேர்த்துக்கொண்டு, அந்த ஊரைப் பிரபலப்படுத்தி வந்திருக்கிறார்கள். புறநகர்ப் பகுதியான மாம்பலத்தைத் தங்கள் பெயருக்கு முன் இணைத்துக் கொண்டிருக்கும் ஜ்ளைச் சந்திக்க நேர்ந்தது.

இரட்டையர்கள் ஒரு குருவிடம் பாடம் கற்றுக்கொள்வார்களா அல்லது இரட்டையர்களான குருமார்களிடம் இசை கற்றுக்கொள்வார்களா என்ற கேள்விதான் முதலில் எழுந்தது.

""முதலில் நாங்கள் ஆலக்கிராமம் ராமச்சந்திரன் என்பவரிடம்தான் கற்றுக்கொள்ள ஆரம்பித்தோம். இவர் மகாராஜபுரம் விசுவநாதய்யர் அவர்களின் சீடர். பிறகு சுவாமிநாதன் என்பவரிடம் கொஞ்சம் கற்றோம். பிறகுதான் எங்கள் அப்பா, கஞ்சிரா வித்துவான் ரங்காச்சாரி,இரட்டையர்களான பி.வி.ராமன் - பி.வி.லஷ்மணன் அவர்களிடம் கொண்டு போய் சேர்த்தார். இவர்களுடைய பாணி வித்தியாசமானது. பன்னிரண்டு வருடங்கள் இவர்களிடம் இசை கற்றுக்கொண்டோம்!''



வித்தியாசமான பாணியில் சொல்லிக் கொடுப்பது என்றால்?

""ஒரே சமயத்தில் நான்கு பாடல்களைச் சொல்லித் தர ஆரம்பிப்பார்கள். முதலில் இவற்றைக் காதால் கேட்டு, மனதில் வாங்கிக் கொள்ள வேண்டும். நொட்டேஷன் எதுவும் எழுதிக்கொள்ளவே கூடாது. எல்லாருடைய நோட்டுப் புத்தகங்ளையும் வாங்கி வைத்துக் கொண்டு விடுவார். வகுப்பு முடிந்ததும் நாங்கள் பஸ் ஸ்டாப்புக்குப் போய் நின்றுகொண்டு, அவர்கள் சொல்லித் தந்ததை எல்லாம் நினைவுக்குக் கொண்டு வந்து பேசிக்கொண்டிருப்போம். எங்களுக்கு சுமார் 1000 கீர்த்தனைகளுக்கு மேல் பார்க்காமலேயே பாடும் திறமை கிடைத்தது. இவர்களால்தான்!'' என்கிறார் இரட்டையர்களில் மூத்தவரான விஜயலக்ஷ்மி.

நான்கு பாட்டுக்களையும் முறையாகக் கற்றுக்கொள்ள ஒரு மாதம் முழுதாக ஆகிவிடுமாம்!

இப்போது கர்நாடக இசைப் பாடகி சுகுணா வரதாச்சாரி அவர்களிடம் கற்றுக்கொள்கிறார்களாம். இவர் பாணி வேறு. ""எங்களுக்கு எப்படித் தேவையோ அப்படிக் கற்றுக் கொடுக்கிறார். சில வேளைகளில் டேப் செய்யவும் அனுமதி அளித்திருக்கிறார். இந்த "டேப்'புகள் மிகவும் பயனுள்ளவை. ஏனென்றால் அவர் அவ்வப்போது சொல்லும் ஆலோசனைகளும், குறிப்புகளும் அதில் பதிவாகி இருக்கின்றன. ஒரே கருத்தில் அமைந்த ("தீமேட்டிக்') பாடல்கள் பாட வேண்டிய நிகழ்ச்சிகள் ஒப்புக்கொள்ள வேண்டி வந்தால் இந்த குரு மிகவும் உதவியாக இருந்து பாடல்களைத் தேர்ந்தெடுத்து, தொகுத்துக் கொடுப்பதோடு, புதியவற்றைக் கற்பித்தும் விடுவார். அபூர்வமான குரு!''

என்று பாராட்டுரை வழங்குகிறார்கள் இரட்டையர்கள். விஜயலக்ஷ்மி - சித்ராவுக்கு லய விஷயங்கள் தொடர்பானவற்றை தகப்பனார் ரங்காச்சாரியே சொல்லிக் கொடுப்பாராம். இவருடைய ஆலோசனைகளும் மிகவும் உதவியாக இருக்குமாம். ""வீட்டில் முதல் விமர்சகர்கள் இவர்கள் இருவர்தான்!''என்கிறார் சித்ரா.

எம்.எஸ். அவர்கள் உடல் நலம் குன்றிப் படுத்திருந்தபோது, அவர் முன் பாட இவர்களை அழைத்திருந்தாராம். பக்க வாத்தியங்கள் ஏதும் இல்லாமல், அந்த இசையரசி முன் பாடிய அனுபவம் மறக்க முடியாதது என்கிறார்கள்.

தெய்வீக இசைப் பாடல்கள் வரிசையில் இவர்கள் வழங்கியுள்ள 75 சி.டி.க்கள் எல்லா இடங்களிலும் ஒலிக்கின்றன.

வீட்டைக் கவனிக்க, குழந்தைகளைப் பார்த்துக் கொள்ள...

""வீட்டில் கணவர் மிகவும் ஒத்துழைப்பார். அவர் பெற்றோர்களும்தான். சில தடவை அவரே உட்கார வைத்துப் பரிமாறியதும் உண்டு.!'' என்கிறார் விஜயலட்சுமி, புன்சிரிப்புடன்.

திருப்புமுனை?

""ஒரு முறை சுப்புடு எங்கள் பாட்டைக் கேட்டுவிட்டு "நீங்கள் இப்போது 5 கட்டையில் பாடுகிறீர்கள். இதை ஐந்தரை அல்லது ஐந்தேகாலுக்கு உயர்த்துங்கள்!' என்றார். அவர் அறிவுரை மிகவும் சரியானது. அதற்கான பயிற்சிகள் செய்த பிறகு, அதன் பலன் நன்றாகத் தெரிந்தது!'' என்கிறார் விஜயலட்சுமி.

இரட்டையர் பாட்டு என்றால், ஒருவர் நன்றாகப் பாடுவார். இன்னொருவர் சமாளிப்பார். மாம்பலம் சகோதரிகள் இருவருக்குமே இனிமையான குரல். அதனால்தான் இவர்களின் நிகழ்ச்சிகள் தொய்வில்லாமல் இருக்கின்றன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.