செண்பக மீன்!

அரியவகை கடல்வாழ் உயிரினமான இம்மீன் இனங்களில் ஆண் இனம் பெண் மீன் இட்ட முட்டைகளை வாயில் வைத்து அடைகாக்கும் ஓர் அற்புதஉயிரினம். தென் மாவட்டங்களில் செண்பக மீன் என்றும் வடமாவட்டங்களில் சிலந்தான் என்றும் கூ
செண்பக மீன்!
Updated on
1 min read

அரியவகை கடல்வாழ் உயிரினமான இம்மீன் இனங்களில் ஆண் இனம் பெண் மீன் இட்ட முட்டைகளை வாயில் வைத்து அடைகாக்கும் ஓர் அற்புதஉயிரினம்.

தென் மாவட்டங்களில் செண்பக மீன் என்றும் வடமாவட்டங்களில் சிலந்தான் என்றும் கூறுவர்.

இதனை ஆங்கிலத்தில் கார்டினல் ஃபிஷ் என்கின்றனர். இங்கிலாந்து நாட்டில் பெரும்பாலான பெண்கள் சிவப்பு நிற தொப்பிகளையே அணிவது உண்டாம். இந்த மீனின் தலைப்பகுதியும் சிவப்பு நிறத்தில்தான் இருக்கும். சிகப்பு தொப்பி போன்று தலையில் இருப்பதால் இந்த மீனைச் சிவப்பு மீன் என்றும் செண்பக மீன் என்றும் சொல்கின்றனர்.சிலேபி மீன்களைப் போன்று இம்மீன்களும் முட்டைகளை வாயில் வைத்து அடைகாக்கும் தன்மையுடையன. உலகில் 250 வகைகள் இருந்தாலும் மன்னார் வளைகுடா கடல்பகுதியில் 19 வகைகள் மட்டும் இருப்பதாக தெரிய வந்துள்ளது என்கிறார் மன்னார் வளைகுடா உயிர்க்கோள காப்பக அறக்கட்டளையின் திட்ட அலுவலர் அ.முருகன்.

அவர் மேலும் கூறியதாவது..

""ஒரு பெண் மீன் சுமார் 4000 முட்டைகள் வரை இடும். அடைகாக்கும் ஆண் மீன்கள் முதல் 3 நாட்கள் வாயில் இருக்கும் முட்டைகளையே சிறிது மட்டும் தின்றுகொள்ளும். பிறகு 6 நாட்கள் சாப்பிடாது. அதே போல முட்டை பெரிதாகி பொரியும் நேரத்திலும் சில சில முட்டைகளைத் தின்று விடும். சுமார் 10 முதல் 15 நாட்களில் அடைகாக்கப்பட்ட முட்டைகள் குஞ்சுகளாகி விடும். முட்டையிலிருந்து வெளிவரும் குஞ்சுகள் பிறந்தவுடன் அனைத்தும் கடலின் மேல்பரப்புக்கு வந்து மிதக்கும்.

சில நாட்கள் கழித்து கடலின் அடிப்பகுதிக்கு போய் விடும்.

ஒரு செண்பக மீன் சுமார் 10 செ.மீ நீளம் வரை மட்டுமே வளரும். பவளப்பாறைகள்,கடல் பாசிகள் உள்ள இடங்களில் அதிகமாக காணப்படும்.பெரும்பாலான மீன் வகைகளில் இனப் பெருக்கத்துக்கு ஆண்களே காரணமாக இருக்கும். இந்த இனத்திலோ பெண் இனமே இனப் பெருக்கத்துக்கு தூண்டுதலாக இருக்கிறது.

கன்னியாகுமரி அருகே சின்னமூட்டம்,ராமேசுவரம் அருகே மண்டபம்,தூத்துக்குடி உள்ளிட்ட கடல் பகுதிகளில் தான் மிக அதிகமாக காணப்படுகின்றன. வண்ணமீன்கள் வளர்ப்பவர்களுக்கு அதிகம் தேவைப்படும் இம்மீன்கள் குறித்து மீனவர்களிடையே போதிய விழிப்புணர்வு இல்லாததாலும் இதன் முக்கியத்துவம் பலருக்குத் தெரியாமல் இருப்பதாலும் இது கோழித் தீவனமாகவே பயன்பட்டுக் கொண்டிருக்கிறது.

வண்ண மீன் வளர்ப்பில் ஒரு மீன் ரூ.25வரை கூட விற்பனையாகிறது. முட்டைகளை வாயில் வைத்து ஆண் மீன்கள் அடைகாப்பதால் ஆண் மீனின் வாய் மட்டும் பெண் மீனின் வாயை விடச் சிறிது பெரிதாக இருக்கும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com