வைரமுத்துவுக்கு ஞானபீட விருது!பதவி உயர்வு வேண்டுமா? அக்செஞ்சர் தலைமை செயல் நிர்வாகி சொல்வது என்ன?உணவகங்கள், டீக்கடைகளுக்கு மின்சார மானியம்: தமிழக அரசின் அதிரடி அறிவிப்புசிலிண்டர் தட்டுப்பாடு! தமிழக அரசின் முக்கிய அறிவிப்புகள் என்னென்ன?விளம்பர வெறிக்கு சிறுவர்களா? வெட்கமாக இல்லையா? அண்ணாமலை கேள்வி! ஈரான் தாக்குதலில் 5 அமெரிக்க டேங்கர் விமானங்கள் சேதம்!தங்கம், வெள்ளி விலை அதிரடி குறைவு! வேளச்சேரி - பரங்கிமலை ரயில் சேவை தொடங்கியது! வீடுகளுக்கு சமையல் எரிவாயு சிலிண்டா் தடையற்ற விநியோகம்: மத்திய அரசு மீண்டும் உறுதி
/

இத்தாலி சமையல் கற்கும் இளம்பெண்கள்!

சென்னை அடையாறு கேட். பெரிதும் மக்கள் நடமாட்டமில்லாத அமைதியான பகுதி. ஒரு கட்டிடத்தின் உள்ளே நுழைந்தோம். அறை, அறையாக இருக்கின்றன. ஆறு பேர் இருக்கக் கூடிய அறைகள். அறைக்குள்ளே மங்கலான வெளிச்சம். கொளுத்தும

News image
Updated On :20 செப்டம்பர் 2012, 2:29 am

ந. ஜீவா

சென்னை அடையாறு கேட். பெரிதும் மக்கள் நடமாட்டமில்லாத அமைதியான பகுதி. ஒரு கட்டிடத்தின் உள்ளே நுழைந்தோம். அறை, அறையாக இருக்கின்றன. ஆறு பேர் இருக்கக் கூடிய அறைகள். அறைக்குள்ளே மங்கலான வெளிச்சம். கொளுத்தும் வெயிலின் கொடூரம் தெரியாமல் இருக்க ஏசி. மிகவும் சத்தமில்லாமல் பேசிக் கொண்டு, மிகவும் மகிழ்ச்சியாக, ரிலாக்ஸôக ஆண்களும், பெண்களும், குழந்தைகளும்  சாப்பிட்டுக் கொண்டிருக்கிறார்கள்.  இன்னும் உள்ளே செல்கிறோம். இளம்பெண்கள் சிலர், கையும் கரண்டியுமாக மும்முரமாகச் சமையல் கற்றுக் கொண்டிருக்கிறார்கள். இது ரெஸ்டாரண்டா? அல்லது வீடா? திகைப்பு ஏற்படுகிறது.

ஒரு ரெஸ்டாராண்டிற்கான எந்த அடையாளமும் தென்படவில்லை. வெளியே நாம் பார்த்த "டஸ்கானா ஆன் சேமியர்ஸ் பை வில்லி' என்ற பெயர்ப் பலகைதான் தவறோ என்று யோசித்துக் கொண்டிருக்கும் போது நம்மை நோக்கி புன்சிரிப்புடன் வருகிறார் விபின் சச்தேவ். அந்த ரெஸ்டாரண்டின் சொந்தக்காரர். ரொம்ப அமைதியாக இருக்கிறதே? என்றோம்.

""நிறைய ரெஸ்டாரண்டுகளில் எப்போதும் கூட்டமாக இருக்கும். ஒரே இரைச்சலாக இருக்கும். ஆற அமர உட்கார்ந்து, சந்தோஷமாகப் பேசிக் கொண்டு சாப்பிட முடியாது. மனிதர்கள் எப்போதுமே பிரைவஸியை விரும்புபவர்கள். இந்த ரெஸ்டாரண்டில் சாப்பிட வருகிறவர்கள் பக்கத்தில் வெயிட்டர் கூட நிற்க மாட்டார். அதற்கும் ஓர் ஏற்பாடு செய்திருக்கிறோம்.

ஒரு வயர்லெஸ் பெல் இருக்கும். இங்கே வருகிற வாடிக்கையாளர் அந்தப் பெல்லை அழுத்தினால் வெயிட்டரிடம் உள்ள பேஜரில் வாடிக்கையாளர் அழைப்பது தெரியும். வெயிட்டர் உடனே வந்து அவர் கேட்கும் உணவுகளைக் கொடுத்துவிட்டுச் சென்றுவிடுவார்'' என்று பேசிக் கொண்டே போனவரை நிறுத்தி, ரெஸ்டாரண்டில் சமையல் கற்றுக் கொடுக்கிறீர்கள் போல் இருக்கிறதே? எனக் கேட்டோம்.

""ஆமாம். எனக்குக் கற்றுக் கொள்வதிலும், கற்றுக் கொடுப்பதிலும் அதிக ஆர்வம்'' என்று உற்சாகக் குரலில் ஆரம்பிக்கிறார் விபின் சச்தேவ்.

""நான் நடத்தும் ரெஸ்டாரண்டுகளுக்கு அதிகம் வருகிறவர்கள் மிடில் கிளாஸ், அப்பர் மிடில் கிளாûஸச் சேர்ந்தவர்கள்தான். அவர்களில் பெரும்பாலோர் வெளிநாடுகளுக்குப் போயிருப்பார்கள். அங்கே பல உணவகங்களில் சாப்பிட்டிருப்பார்கள். வெளிநாடுகளில் உள்ள அதே தரத்துடன், அதே சூழ்நிலையுடன் இங்கும் உணவகங்களை நடத்த வேண்டும் என்பதே எண்ணம். அந்த எண்ணத்தில் ஆரம்பித்த இந்த உணவகம் என்னுடைய இன்னோர் ஆசையையும் நிறைவேற்றி வைத்திருக்கிறது'' சற்று நிறுத்துகிறார்.

""அதாவது, பிறருக்குக் கற்றுக் கொடுக்க வேண்டும் என்ற என் ஆசையை'' -  என்கிறார் மகிழ்ச்சியுடன்.

வசதியான வீடுகளில் சமையல் செய்வதற்கு நிறையப் பேர் இருப்பார்கள். அப்படியிருக்க உங்களிடம்  வசதியான வீட்டுப் பெண்கள் சமையல் கற்றுக் கொள்ள எப்படி வருவார்கள்? என்று கேட்டோம்.

""சமையல் கற்பதில் ஆர்வம் இருக்கிறவர்கள் வருகிறார்கள். இரண்டு மணி நேர வகுப்பில் இத்தாலிய உணவு வகைகளான பிஸ்ஸô, பாஸ்தா, டெஸர்ட்ஸ், சாலெட்ஸ், பிரஸ்சேட்டா ஆகிவற்றில் இரண்டைச் சமைக்கக் கற்றுக் கொடுக்கிறோம். கற்றுக் கொண்ட பின்பு அவர்கள் உணவகத்தில் சாப்பிட்டுவிட்டுப் போகலாம்'' என்கிறார்.

இப்போதுதான் இன்டர்நெட் வசதிகள், சமையல் கற்றுக் கொடுக்கும் வகுப்புகள், தொலைக்காட்சி வகுப்புகள் என நிறைய இருக்கிறதே? எனத் தயங்கினோம்.

""முறையான, எல்லா வசதிகளும் உள்ள சமையல் அறையும், சாதனங்களும் இல்லாமல் - முறைப்படியாக நேரில் கற்றுக் கொள்ளாமல் - எந்தச் சமையலையும் ஒருவரால் சிறப்பாகக் கற்றுக் கொள்ள முடியாது. அதனால்தான் நிறையப் பேர் இத்தாலிய உணவு வகைகளைக் கற்றுக் கொள்ள ஆர்வமாக இங்கே வருகிறார்கள்'' என்கிறார் உறுதியாக.

உங்களின் எதிர்காலத் திட்டம் என்ன? என்று

கேட்டோம்.

""அடுத்த ஆண்டு ஒரு நூற்றைம்பது மாணவர்களை வைத்து ஒரு கேட்டரிங் காலேஜ் ஆரம்பிக்கப் போகிறேன். ஆங்கிலத்தில் பேசத் தெரியாத சாதாரண மாணவர்களுக்கும் கூட, மிகக் குறைந்த காலத்தில் ஆங்கிலமும் கற்றுக் கொடுத்து, சமையலும் கற்றுத் தரப் போகிறேன். எதையும் சரியாகவும் முறையாகவும் கற்றுத் தந்தால், மாணவர்களுக்குப் படிப்பு சுமையாக இருக்காது என்பது என் எண்ணம்'' என்கிறார் விபின் சச்தேவ்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.