கறைகளை நீக்கும் வழிகள்!
காபி, டீ கறைபட்ட துணியை மிதமான சூடு தண்ணீரில் பத்து நிமிஷம் ஊற


* காபி, டீ கறைபட்ட துணியை மிதமான சூடு தண்ணீரில் பத்து நிமிஷம் ஊற வைக்கவும். சிறிது போரெக்ஸ் லோஷனை நனைத்துக் கறையை ஒற்றி எடுத்துவிட்டு மீண்டும் குளிர் நீரில் கசக்கினால் கறை மறையும்.
* சாக்லேட் கறை அதிகம்பட்டிருந்தால் ஸ்பிரிட்டை பஞ்சால் ஒற்றி கறை மீது தடவி பிறகு கசக்கினால் மறையும்.
* மிதமான சூடுள்ள நீரில் ஊற வைத்து பொடி உப்பைப் போட்டுத் தேய்த்தால் துணியில் ஏற்பட்ட க்ரீம் கறை மறையும்.
* கிளிசரினை லேசாக சூடு செய்து லிப்ஸ்டிக் கறைபட்ட துணியின் மீது சில சொட்டுகள் இட்டுக் கசக்கவும். பிறகு டிடர்ஜென்ட் கொண்டு துவைக்க கறை மறையும்.
* மிதமான சூடு நீரில் நனைத்து சோடியம் கார்பனேட் கொண்டு துவைக்க சேறினால் ஏற்பட்ட கறை மறையும்.
* துணியில் இங்க் கறைபட்டுவிட்டால் கறைபட்ட இடத்தை தண்ணீரில் நனைத்து எலுமிச்சைச் சாறைக் கொண்டு கசக்கினால் கறை மறையும்.
* நகப்பூச்சுக் கறை நீங்க ஸ்பிரிட் நனைத்த துணியால் கறையை ஒற்றவும். பிறகு டிடர்ஜென்ட் கலந்த நீரில் துவைக்க கறை மறையும்.
("பெண்களுக்கு வீட்டுக் குறிப்புகள்' என்ற நூலிலிருந்து)
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...