சயன்ஸிலிருந்து சமஸ்கிருதத்துக்கு!
கர்நாடக இசை மூவர்களில் ஒருவரான முத்துசாமி தீட்சிதரின் பாடல்களை டாக்டரேட் பட்டத்துக்கு ஆராய்ச்சி செய்ய, தில்லி ஜவாஹர்லால் நேரு நினைவு நிதியிலிருந்து ஆஷா ராமசுவாமிக்கு உதவித் தொகை அளிக்கப்பட்டது.


கர்நாடக இசை மூவர்களில் ஒருவரான முத்துசாமி தீட்சிதரின் பாடல்களை டாக்டரேட் பட்டத்துக்கு ஆராய்ச்சி செய்ய, தில்லி ஜவாஹர்லால் நேரு நினைவு நிதியிலிருந்து ஆஷா ராமசுவாமிக்கு உதவித் தொகை அளிக்கப்பட்டது.
சென்னைப் பல்கலைக்கழகத்தின் சமஸ்கிருத துறைத் தலைவர் டாக்டர் ஈ.ஆர். ரமாபாய், இசைக் கலைஞர் சீதா நாராயணன் மற்றும் வீணைக் கலைஞர் கல்பகம் சுவாமிநாதன் ஆகியோர் துணையுடன் இந்த ஆய்வுப் பணியை முடித்தார் ஆஷா.
முத்துசாமி தீட்சிதரின் கருத்து, அமைப்பு மற்றும் விளக்கத் தொகுப்பு என்ற ஆங்கில நூலை சமீபத்தில் "தத்துவாலோகா' அரங்கில், சுவாமி தயானந்த சரசுவதி தலைமையில் வெளியிட்டார்கள்.
சாதாரணமாக சங்கீத மூவரில் முத்துசாமி தீட்சிதரைப் பற்றிக் குறிப்பிடும்போது, அவர் எந்தக் கோயிலைப் பற்றிப் பாடியிருக்கிறாரோ, அந்தக் கோயிலின் விசேஷ அமைப்பு, அங்கே குடிகொண்டிருக்கும் இறைவன், இறைவி ஆகியோர் பற்றி எல்லாம் விவரமாகச் சொல்லியிருப்பார் என்பார்கள். (ஒரு புகழ் பெற்ற கோயிலில் ஒரு தூணில் பெரிய தேன்கூடு இருப்பதைக்கூடத் தன் பாடலில் குறிப்பிட்டிருக்கிறார் முத்துசாமி தீட்சிதர் அது இப்போதும் அங்கே இருப்பதாகச் சொல்கிறார்கள்!)
""தீட்சிதர் ஆன்மிக நலனுக்கும் பொருளியல் வாழ்வுக்கும் ஏற்ற சாகித்தியங்களை இயற்றியிருப்பதால்தான், அவர் பாடல்களில் நிறைய இடங்களில் "போக', "மோக்ஷ' என்ற வார்த்தைகள் வருவதைச் சுட்டிக்காட்டினார்.
தீட்சிதர் உருவத்தில் இருந்து உருவமற்றதற்குச் செல்கிறார். ஆகிக்கொண்டிருப்பதற்கும் ஆனதற்கும் இடையே ஊஞ்சலாடுகிறார். இதற்கிடையே உள்ள மென்மையான பலவித வெளிப்பாடுகளையும் அனுபவங்களையும் ஆராய்கிறார். பின்னர் அவற்றுக்கு வடிவம் தந்து நம்மைத் திகைக்க வைக்கிறார்'' என்கிறார் ஆஷா.
""வேதியியல் படித்த ஆஷாவுக்கு சம்ஸ்கிருதம் படிக்கும் ஆசை எப்படி வந்தது?'' என்ற கேள்விக்கு, ""நடனம் கற்கும்போது தீட்சிதர் இயற்றிய "ரூபமு ஜூசி' என்ற வர்ணத்துக்கு நாட்டியமாடுகையில், "தாபத்ரய ஹருடை' (மூன்றுவித தாபங்களையும் போக்குபவனே) என்ற வார்த்தைக்கு எனக்குப் பொருள் தெரியவில்லை. அந்த வர்ணத்தில் சிருங்கார ரசம் தூக்கலாக இருந்தாலும், நாயகி தாபத்ரயத்தைத் தன்னிடமிருந்து விலக்குமாறு இறைஞ்சுகிறாள். எனக்குப் பின்னர் வேதாந்த தத்துவம் படிக்கத் துவங்கியவுடன் அதற்கான விடை கிடைத்தது. எனவே தெய்வீகமான வகையில், சந்தர்ப்பங்கள் மர்மமாக உருவாகி, என்னைக் கையைப் பிடித்து அழைத்து சம்ஸ்கிருதத்துக்கும், இறுதியில் தீட்சிதரிடமும் கொண்டுபோய் விட்டது. குறிப்பாக, தீட்சிதரின் தத்துவங்களுக்கும் அவருடைய பாடல்களில் இருக்கும் மாயத்தன்மைக்கும் என்னை இட்டுச் சென்றது'' என்கிறார் ஆஷா.
இந்த நூலில் ஐந்து பகுதிகள் இருக்கின்றன. அத்வைத தத்துவம், ஸ்ரீவித்யா தத்துவம், கடவுளரின் மாயத் தத்துவங்களின் முக்கியத்துவம், கவிதை நயம், குறிப்பிடத்தக்க பிற அம்சங்கள் மற்றும் தீட்சிதருடைய சிந்தனைகள். அத்வைதத்தை மையப்பொருளாகக் கொண்டு, தீட்சிதர் எவ்வாறு பலவித பாரம்பரியங்களை ஒன்றிணைத்து, மாயைத் தத்துவத்தையும் இசையையும் கலந்து தம் கிருதிகளைப் படைத்திருக்கிறார் என்பதே நூலின் சாரம்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...