மேற்கு வங்கத்தில் 2-ஆவது கட்ட தோ்தல் அமைதியாக நடந்தது: தோ்தல் ஆணையம் திட்டமிட்டபடி மே 3-ஆம் வாரத்தில் 12-ஆம் வகுப்பு தோ்வு முடிவு: சிபிஎஸ்இ வெறுப்புப் பேச்சுகளுக்கு எதிரான மனுக்கள்: உச்சநீதிமன்றம் தள்ளுபடி மேற்காசிய போரால் பணவீக்கம் அதிகரிக்கும் அபாயம்: நிதியமைச்சகம் அறிக்கை எத்தனால் கலப்பு விரிவாக்கம்: வாகன விதிமுறைகளில் மத்திய அரசு திருத்தம் கேரளம்: மாநிலம் முழுவதும் அறிவிக்கப்படாத தொடா் மின் வெட்டு; பல இடங்களில் வெடித்த போராட்டம்
/

உள்ளத்தில் நல்ல உள்ளம்!

"சத்தியவான் சாவித்திரி’ நாடகத்தில் எமன் வேஷத்தில் நடிக்க வேண்டியவர் வராததால் கலைவாணர் என்.எஸ்.கிருஷ்ணன் அவ்வேடத்தில் நடித்தார்.

News image
Updated On :28 ஜூலை 2013, 3:02 am

"சத்தியவான் சாவித்திரி’ நாடகத்தில் எமன் வேஷத்தில் நடிக்க வேண்டியவர் வராததால் கலைவாணர் என்.எஸ்.கிருஷ்ணன் அவ்வேடத்தில் நடித்தார்.
 நள்ளிரவு 12 மணிக்கு எமன் வருவார். விடியற்காலை 5 மணி வரை சாவித்திரி கதறி அழுத பிறகு எமன் சத்தியவான் உயிரைத் திருப்பிக் கொடுப்பார்.
 ஆனால் வழக்கத்துக்கு மாறாக எமன் வேடத்தில் நடித்த என்.எஸ்.கிருஷ்ணன், சாவித்திரி கதறியழுத மறுநிமிடமே சத்தியவானை உயிரோடு கொடுத்துவிட்டார்.
 நாடகத் தயாரிப்பாளர் என்.எஸ்.கிருஷ்ணனை இதற்காக மிகவும் கடிந்து கொண்டார்.
 அதற்கு என்.எஸ்.கிருஷ்ணன் சொன்ன பதில் இது:
 ""கணவனை இழந்த ஒரு பெண் கதறியழும்போது அதைப் பார்த்துக் கொண்டு என்னால் எப்படி சும்மா இருக்க முடியும்?’’
 நடிப்புக்காகக் கூட இன்னொருவர் துன்பத்தைக் காணச் சகியாத கிருஷ்ணனின் நல்ல உள்ளத்தை அறிந்து தயாரிப்பாளர் சமாதானமானார்.
 ("என்.எஸ்.கிருஷ்ணன்’ -நூலிலிருந்து)

 
 
 
 
 
 
 
 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.