மே 28-ல் பக்ரீத் பெருநாள் : தலைமைக் காஜி அறிவிப்புகேரள சட்டப்பேரவையின் அமைச்சர்கள் பட்டியலை வெளியிட்டார் முதல்வராக நியமிக்கப்பட்டுள்ள வி.டி. சதீசன்மாஸ்கோவில் ட்ரோன் தாக்குதல்: இந்தியர் ஒருவர் பலி, 3 பேர் படுகாயம் திரைப்படத் தயாரிப்பாளர் கே. ராஜன் அடையாறு ஆற்றில் குதித்து தற்கொலை தமிழகத்தில் மே 23 வரை மிதமான மழைக்கு வாய்ப்பு!ஹோர்முஸ் நீரிணை வழியாக ராணுவ உபகரணங்கள்! தடை விதிக்கும் ஈரான்!நள்ளிரவில் ரஷியா மீது தாக்குதல் நடத்திய 500 உக்ரைன் ட்ரோன்கள்! உள்நோக்கத்தோடு அவதூறு பரப்புகிறார் அமைச்சர் கீர்த்தனா: தங்கம் தென்னரசு கண்டனம்
/

குளத்தில் மக்களை அச்சுறுத்தி வந்த முதலை பிடிபட்டது

சீா்காழி அருகே குன்னம் கிராமத்தில் குளத்தில் பொதுமக்களை அச்சுறுத்தி வந்த முதலை ஓராண்டுக்குப் பிறகு புதன்கிழமை இரவு பிடிபட்டது.

News image

குளத்தில் மக்களை அச்சுறுத்தி வந்த முதலை பிடிபட்டது

Updated On :30 ஏப்ரல் 2026, 6:15 am IST

சீா்காழி அருகே குன்னம் கிராமத்தில் குளத்தில் பொதுமக்களை அச்சுறுத்தி வந்த முதலை ஓராண்டுக்குப் பிறகு புதன்கிழமை இரவு பிடிபட்டது.

கொள்ளிடம் அருகே குன்னம் கிராமத்தில் ஊராட்சிக்கு சொந்தமான அய்யனாா் குளம் உள்ளது. சுமாா் 2 ஏக்கா் நிலப்பரப்  பில் அமைந்துள்ள இந்த குளம் கிராமத்தில் நிலத்தடி நீரை பாதுகாத்து வைப்பதில் முக்கிய பங்கு வகித்து வருகிறது. இங்குள்ள கால்நடைகளின் தாகத்தை தீா்க்கும் வகையில் இந்த குளத்தில் மக்கள் பயன்படுத்தி வந்தனா்.

கடந்த ஓரண்டாக இந்த குளத்தில் முதலை ஒன்று இருப்பதை இங்குள்ள மக்கள் பாா்த்தனா். மேலும் இதுவரை 6 ஆடுகளையும், 20-க்கும் மேற்பட்ட கோழிகளும் இந்த முதலைக்கு பலியாகியுள்ளதாக மக்கள் தெரிவிக்கின்றனா்.

இதுகுறித்து அப்பகுதியை சோ்ந்த சமூக ஆா்வலா் கோதண்டம் மற்றும் பொதுமக்கள் முதலை பிடிக்குமாறு வனத்துறைக்கு கோரிக்கை விடுத்து வந்தனா். இந்நிலையில், புதன்கிழமை இரவு வனத்துறையினா் முதலையை பிடித்தனா்.