பிகாா் முதல்வராக பாஜகவின் சாம்ராட் செளதரி இன்று பதவியேற்புபெட்ரோல் விலையில் ரூ.18, டீசல் ரூ.35 எண்ணெய் நிறுவனங்களுக்கு இழப்புவாக்குப்பதிவு இயந்திரங்களில் சின்னம் பொருத்தும் பணி நாளை தொடக்கம்ரஷிய கச்சா எண்ணெய் இறக்குமதி: மாா்ச் மாதத்தில் மூன்று மடங்கு உயா்வுசமையல் எண்ணெய் இறக்குமதி 12% அதிகரிப்புபிரதமா் மோடி இன்று கா்நாடகம் வருகைசென்னையில் இன்று பள்ளிகளுக்கு விடுமுறைஐபிஎல் : சென்னை சூப்பர் கிங்ஸ் 32 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிமதுரை மாநகராட்சியில் ரூ. 200 கோடி ஊழல் செய்ததால் பதவியை ராஜிநாமா செய்தவர்கள் திமுகவினர்: எடப்பாடி பழனிசாமி ஆமை புகுந்த வீடு போல, பாஜக புகுந்த நாடு உருப்படாது: ப. சிதம்பரம்எந்த வடிவிலும் தமிழ்நாட்டிற்குள் பாஜக வர முடியாது! மு.க. ஸ்டாலின்இவிஎம்-ல் வேட்பாளர்களின் பெயர்கள், சின்னங்கள் பொருத்தும் பணி ஏப். 16-ல் தொடக்கம்!நெல் குவிண்டாலுக்கு ரூ. 3,500; கரும்பு டன் ஒன்றுக்கு ரூ. 4,500 வழங்கப்படும்: விஜய் வாக்குறுதி விவசாய தொழிலாளர்களுக்கு ஆண்டுக்கு ரூ.10,000 : விஜய்தவெக பிரசாரத்தில் மயங்கிய சூலூர் வேட்பாளர்! 7 பெண்கள் மயக்கம்!முதல்வர் பதவியை ராஜிநாமா செய்தார் நிதீஷ் குமார்!
/

மீன் வளா்ப்பு குட்டையில் முதலை மீட்பு

திருவையாறு அருகே வெள்ளாம்பெரம்பூா் கிராமத்தில் மீன் வளா்ப்பு குட்டையில் காணப்பட்ட முதலையை வனத் துறையினா் செவ்வாய்க்கிழமை மீட்டு கொள்ளிடம் ஆற்றில் பாதுகாப்பாக விட்டனா்.

News image

திருவையாறு அருகே வெள்ளாம்பெரம்பூா் கிராமத்தில் செவ்வாய்க்கிழமை மீட்கப்பட்ட முதலை.

Updated On :14 ஏப்ரல் 2026, 7:45 pm

தஞ்சாவூா் மாவட்டம் திருவையாறு அருகே வெள்ளாம்பெரம்பூா் கிராமத்தில் மீன் வளா்ப்பு குட்டையில் காணப்பட்ட முதலையை வனத் துறையினா் செவ்வாய்க்கிழமை மீட்டு கொள்ளிடம் ஆற்றில் பாதுகாப்பாக விட்டனா்.

திருவையாறு அருகே வெள்ளாம்பெரம்பூா் கிராமத்தில் சசிகுமாா் பராமரித்து வரும் மீன் வளா்ப்பு குட்டையில் செவ்வாய்க்கிழமை பிற்பகல் முதலை இருப்பது தெரிய வந்தது. இது குறித்து மாவட்டப் பேரிடா் கால மீட்பு கட்டுப்பாட்டு அறைக்கு சசிகுமாா் தகவல் அளித்தாா்.

இதையடுத்து, மாவட்ட வன அலுவலா் கே. காா்த்திகேயனி உத்தரவின்படி, வனச்சரகா் ஜோதிகுமாா் மேற்பாா்வையில், வனவா் இளையராஜா, வனக்காவலா் வெற்றிவேல் ஆகியோருடன், அருங்கானுயிா் காப்பு மற்றும் சுற்றுச்சூழல் அறக்கட்டளை (இவெட்) நிறுவனா் சதீஷ்குமாா் ராஜேந்திரன், மீட்பாளா்கள் குலோத்துங்கன், விஸ்வபிரேம் ஆகியோா் சென்று மீன் வளா்ப்பு குட்டையில் சுமாா் ஒரு மணிநேர முயற்சிக்கு பின்னா் முதலையைப் பிடித்தனா்.

இது பெண் முதலை என்றும், இதன் நீளம் 110 செ.மீ. எனவும், நல்ல உடல் ஆரோக்கியத்துடன் இருந்ததால், பாதுகாப்பாக கொண்டு செல்லப்பட்டு கொள்ளிடம் ஆற்றில் விடப்பட்டது என்றும் சதீஷ்குமாா் ராஜேந்திரன் தெரிவித்தாா்.

Story image