மேற்கு வங்க ஆளுநராக ஆர்.என்.ரவி நாளை பதவியேற்பு!நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள்!தமிழ்நாட்டில் மீண்டும் 'அம்மா' ஆட்சி: பியூஷ் கோயல்அரசுப் பள்ளி சத்துணவில் பல்லி: மாணவர்கள் மருத்துவமனையில் அனுமதி!நவாஸ்கனி எம்.பி.க்கு எதிரான வழக்கை திரும்பப் பெற ஓ.பன்னீர்செல்வம் முடிவுதென் தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புதமிழகத்தில் சமையல் எரிவாயு சிலிண்டர்களுக்கு தட்டுப்பாடுபிரதமர் மோடி இன்று திருச்சி வருகை! ரூ. 5,650 கோடி திட்டங்களை தொடங்கி வைக்கிறார்!மின்மாற்றிகள் கொள்முதலில் ரூ.397 கோடி ஊழல் இல்லை: டான்ஜெட்கோ நேரடி பணி நியமனங்களில் ஓபிசி பிரிவினருக்கு 27% இடஒதுக்கீடு அமல்: மத்திய அரசு!
/

முட்டைக்கோஸ் மருத்துவம்!

மளிகைக் கடைக்கு போகும்போது மறந்து விடாமல் இருக்க குறிப்பு எழுதிக் கொண்டு போவோமே... அது போல பட்டியல் இருக்கிறதே என்று நினைக்கிறீர்களா?

News image
Updated On :14 அக்டோபர் 2013, 2:40 am

சி.வ.சு.ஜெக​ஜோதி​

ஒரு பல்செட், 15 டாலர்கள், 3 குண்டூசிகள், ஒரு இன்ஜெக்ஷன் நீடில், ஒரு தையல் ஊசி, இரு உடைந்த வளையல் துண்டுகள், 3 ஊக்குகள், கால் கொளுசு திருகாணி-1, கோழி எலும்பு-1 இவை தவிர 30 காசுகள் உட்பட இதுவரை மொத்தம் 60
 பொருட்கள்.
 மளிகைக் கடைக்கு போகும்போது மறந்து விடாமல் இருக்க குறிப்பு எழுதிக் கொண்டு போவோமே... அது போல பட்டியல் இருக்கிறதே என்று நினைக்கிறீர்களா? அதுதான் இல்லை. இவையெல்லாம் மனிதர்கள் அவர்களையும் அறியாமல்,தப்பித் தவறி விழுங்கி விட்ட பொருட்கள். கவனக்குறைவினால் விழுங்கி விட்ட இவற்றை ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியை சேர்ந்த பாரம்பரிய சித்த மருத்துவர் டி.கே.பலராமன் எந்தவித ஆப்ரேஷனும் செய்யாமல் முட்டைக்கோஸ் மூலமாகவே வெளியில் எடுத்திருக்கிறார்
 என்றால் ஆச்சரியப்படாமல் இருக்க முடியாது.
 இந்த முட்டைக்கோஸ் மருத்துவத்திற்கு அவர் கட்டணம் எதுவும் பெறுவதில்லை. விழுங்கப்பட்ட பொருட்கள் உடலில் எந்த இடத்தில் இருக்கின்றன என்பதற்காக எக்ஸ்ரே கூட எடுத்துப் பார்ப்பதில்லை. தொடு உணர்வு மூலம் அவை இருக்கும் இடத்தை சரியாகக் கண்டறிந்து அவற்றை வெளியேற்றுகிறார்.
 ராமநாதபுரம் மாவட்ட நிர்வாகம் இவரது சாதனையைப் பாராட்டி சித்த மருத்துவ சாதனையாளர் விருதும், சித்த மருத்துவ சேவைக்கான விருதும் வழங்கி கௌரவித்திருக்கிறது. இனி மருத்துவர் பலராமன் பேசுகிறார்:
 
 ""வாயில் பல்செட் மாட்டியிருந்த பரமக்குடி நூர்முகம்மது என்பவர் மாத்திரை சாப்பிடும் போது அவரையும் அறியாமல் பல்செட்டை முழுங்கி விட்டார். அதே போல பரமக்குடி அருகே எமனேசுவரம் ஜீவா நகரில் வசிக்கும் நெசவுத் தொழிலாளி குப்புச்சாமி என்பவர் கோழி இறைச்சி சாப்பிட்டுக் கொண்டிருந்த போது அதன் எலும்பு ஒன்றையும் சேர்த்து விழுங்கி விட்டார். பூங்கொடி என்ற 19 வயது இளம்பெண் ஃபைலில் குத்தி இருந்த குண்டூசியை வாயில் வைத்துக் கொண்டே அருகில் இருந்தவர்களிடம் பேசிக் கொண்டிருந்த போது, அவரையும் அறியாமல் அது வாய்க்குள்ளே ஓடி விட்டது. இது போல மனிதர்கள் விழுங்கி விட்ட ஊக்குகள், டாலர்கள்,காசுகள் என சுமார் 60க்கும் மேற்பட்ட பொருட்களை வெளியில் எடுத்திருக்கிறேன்.
 பொருட்களை விழுங்கியவர்களிடம் எக்ஸ்ரே எடுக்கச் சொன்னால், அவர்களுக்கு செலவாகி விடும் என்பதால் ஸ்கேன்,எக்ஸ்ரே என எதையும் எடுக்க சொல்வதில்லை. எனக்குத் தெரிந்த வர்மக்கலை மூலம் விழுங்கிய பொருள் உடலில் எந்த இடத்தில் இருக்கிறது என்பதை தெளிவாகத் தெரிந்து கொள்கிறேன். ஒரு சிலர் வரும் போதே எக்ஸ்ரே எடுத்துக் கொண்டு வந்து விடுகிறார்கள்.
 மனிதர்கள் தவறுதலாக விழுங்கிய பொருட்களை வெளியேற்றுவதில் முட்டைக்கோஸ் முக்கியப் பங்கு வகிக்கிறது எனலாம். உணவுப் பாதையில் ஜீரணிக்காமல் இருக்கும் அன்னியப் பொருட்களை வெளியேற்றும் அற்புத சக்தி முட்டைக்கோஸýக்கு இருக்கிறது. எந்தப் பொருளையேனும் விழுங்கி விட்டு வருவோர்க்கு எனது வீட்டிலேயே முட்டைக்கோஸ் பொறியல் செய்து கொடுக்கிறேன். முட்டைக்கோஸ் சாப்பிட்டாலே போதும். விழுங்கிய பொருள் ஒரு சிலருக்கு முதல் நாளிலேயே மலத்தின் வழியாக வெளியில் வந்து விடும். ஒரு சிலருக்கு மட்டும் 3 நாட்களுக்குள் வெளியே
 வநது விடும்.
 குழந்தைகளிடம் பெரியவர்கள் சில்லறைக் காசுகளை தருகிற போது சில சமயங்களில் அவற்றை பத்திரமாக வைத்துக் கொள்வதற்காக வாய்க்குள் போட்டு வைத்துக் கொண்டே விளையாடுவார்கள். அப்போது அந்தக் காசு அச்சிறுவர்களையும் அறியாமல் உடலுக்குள் போய் விடும். விழுங்கியவுடன் பலமுறை இருமி வெளியில் வருகிறதா? என்று பார்ப்பார்கள். வரவில்லையெனில் ஒருவித பயத்தில் பெற்றோர்களிடம் வந்து சொல்லுவார்கள். இவ்வாறு வந்த பல குழந்தைகளுக்கு முட்டைக்கோஸ் சாப்பிட வைத்த மறுநாளே மலத்தின் வழியாக நாணயங்கள் வெளியில் வந்திருக்கின்றன. இதுவரை இதே முட்டைக்கோஸ் மருத்துவத்தின் மூலமாக 30 காசுகளையும்,15 டாலர்களையும் (கழுத்தில் அணியும் செயின் டாலர்கள்) வெளியில்
 எடுத்துள்ளேன்.
 மூலிகை மருத்துவம் மற்றும் முட்டைக்கோஸின் மகத்துவம் குறித்து பள்ளி,கல்லூரி மாணவ,மாணவியர்க்கு விழிப்புணர்வு பயிற்சி வகுப்புகளையும் நடத்தி வருகிறேன்.உணவே மருந்து,மருந்தே உணவு எனும் தலைப்பில் பல்வேறு கருத்தரங்குகளில் பேசியுள்ளேன்.
 முக்கியமாக முட்டைக்கோஸின் மருத்துவச் சிறப்புகள் குறித்து பொதுமக்களிடையே போதுமான விழிப்புணர்வு ஏற்பட வேண்டும்.
 உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகமாக்குவது,மார்பகம்,தொண்டை மற்றும் குடற்புற்று நோய்களுக்கு எதிராக செயல்படுவது எனப் பல்வேறு சிறப்புகள் முட்டைக்கோஸில் இருக்கின்றன.
 முட்டைக்கோஸில் உள்ள தாது உப்புக்களான பொட்டாசியம் உடற்செல்கள் மற்றும் சருமம் வளவளப்புடன் இருக்க துணை செய்கிறது. இதயத்துடிப்பு,ரத்த அழுத்தம் இவற்றை சீராக வைப்பதிலும் பங்கெடுக்கிறது. மாங்கனீசு நோய் எதிர்ப்பு சக்திக்கு துணைக்காரணியாக விளங்குகிறது.இரும்புத் தாதானது சிவப்பு ரத்த செல்களை உருவாக்குவதில் முக்கியப் பங்காற்றுகிறது.குறைந்த கலோரி ஆற்றல் உடைய முட்டைக்கோûஸ தைராய்டு நோயால் பாதிக்கப்பட்டவர்களும், சிறுநீர்ப்பையில் கல் இருந்து அதனால் அவதிப்படுபவர்களும் தவிர மற்ற அனைவரும் முட்டைக்கோஸ் சூப் வைத்து சாப்பிடுவது மிகவும் நல்லது. சிறுநீர்ப்பையில் கல் இருந்து அவதிப்படுபவர்கள் எவ்வித ஆப்ரேஷனும் செய்ய வேண்டும் என்ற அவசியமே இல்லை. அவர்கள் வாழைத்தண்டு சூப்(25 மில்லி)வைத்து சாப்பிட்டாலே கல்லானது சிறுநீர் வரும் போது வெளியே வந்து விடும்'' என்கிறார் சித்த மருத்துவர் டி.கே.பலராமன்.

 
 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.