சிறுநீரகச் செய−ழப்புக்கு இஞ்சி ஒத்தடம்!
அமெரிக்காவில் அலபாமா மாநிலத்தில் ஆபன் பல்கலைக்கழகத்தில் இருதய நோய்கள் வருவதற்கான சாத்தியக்கூறுகளை முன்கூட்டியே


அமெரிக்காவில் அலபாமா மாநிலத்தில் ஆபன் பல்கலைக்கழகத்தில் இருதய நோய்கள் வருவதற்கான சாத்தியக்கூறுகளை முன்கூட்டியே தெரிந்து கொள்வது தொடர்பான ஆய்வில் ஈடுபட்டிருந்த சங்கர், அந்தப் பதவியை ராஜினாமா செய்து விட்டு மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தில் உயிரி வேதியியல் துறையின் கௌரவ விரிவுரையாளராக 10 ஆண்டுகளாகப் பணியாற்றி வருகிறார்.
இளம் விஞ்ஞானிகளை உருவாக்குதல், மாணவர்களின் கல்வி பாதியில் நின்று விடாமல் தடுத்தல், அறிவியலை எளிமைப்படுத்தி மாணவர்களுக்கு கற்றுத்தருதல்,மலைவாழ் மக்களுக்கு சுகாதார விழிப்புணர்வு கருத்தரங்குகள் நடத்துதல், இயற்கை உணவின் மகத்துவத்தை மகளிர் குழுக்களுக்கு எடுத்துச் சொல்லுதல் என இவரது சேவைப்பட்டியல் நீள்கிறது.
சிறுநீரக நோயாளிகளுக்கு அவர்களை குணப்படுத்துவது தொடர்பான ஆலோசனைகள்,பயிற்சிகள்,தன்னம்பிக்கை ஏற்படுத்துதல் ஆகிய அனைத்தையும் இலவசமாகவே வழங்கி வருகிறார். சிறுநீரகம் செயல் இழந்தவர்கள் பாரம்பரிய சித்த மருத்துவத்தின் மூலம் ஜிஞ்சர் தெரபி எனப்படும் இஞ்சி ஒத்தடம் என்ற முறையில் ஏராளமானவர்களை குணப்படுத்தி இருக்கிறாராம். அவரிடம் பேசினோம்:
""ஆதிகாலத்து சித்தமருத்துவ முறைகளில் ஒன்று வாய் மூலமாக மருந்துகளைச் சாப்பிடாமல் வெளியிலிருந்து உடலில் பாதிக்கப்பட்ட இடத்தில் ஒத்தடம் கொடுப்பதன் மூலமும் நோய்களை குணப்படுத்தலாம் என்பதும் ஒன்றாகும்.
அவ்வாறு கண்டு பிடிக்கப்பட்டது தான் ஜிஞ்சர் தெரபி மருத்துவம். தமிழில் இஞ்சி ஒத்தடம் என்பார்கள். சிறுநீரகங்கள் செயல் இழந்தவர்களுக்கு இஞ்சி ஒத்தடம் கொடுத்தால் பூரணமாக குணமடைந்து விட முடியும். ரத்த சுத்திகரிப்பு எனப்படும் டயாலிசிஸ் செய்ய வேண்டிய அவசியமும் இல்லை.
இம்முறையைச் சிறுநீரக நோயாளிகள் தெரிந்து பயனடைய வேண்டும் என்பதற்காகவே எவ்வாறு இஞ்சி ஒத்தடம் கொடுப்பது என்கிற செய்முறையினை ஹ்ர்ன் ற்ன்க்ஷங் இணையதளத்திலும் பதிவு செய்துள்ளோம். இந்த இணையதளத்தில் எண்ய்ஞ்ங்ழ் ற்ட்ங்ழ்ஹல்ஹ் என்று தேடினால் அதில் செய்முறை வீடியோ காட்சிகள் இருக்கும். அதை அறிந்து கொண்டு சிறுநீரக நோயாளிகளும் அதே போல செய்தும் பயன் பெறலாம்.
இணையத்தில் பதிவு செய்த 6 மாதங்களில் மொத்தம் 17 ஆயிரம் பேர் பார்த்துள்ளனர். பலனடைந்தவர்களும் அவர்களது கருத்துக்களை அதே இணையதளத்தில் பதிவு செய்துள்ளனர்.
இன்சா எனப்படும் இந்திய விஞ்ஞானக் கழகத்தில் விஞ்ஞானியாக பணியாற்றி ஓய்வு பெற்ற பேராசிரியர் சண்முகம் என்பவருக்கு இரு சிறுநீரகங்களும் செயலிழந்ததால் அவர் அடிக்கடி டயாலிசிஸ் செய்தபடி இருந்தார்.
அமெரிக்காவில் உள்ள அவரது மகன் தன் தந்தையின் வேதனையை உணர்ந்து ஏதேனும் மாற்று மருத்துவம் இருக்கிறதா? எனத் தேடியிருக்கிறார். எளிய சித்த மருத்துவ முறைகளை இந்திய வம்சாவளிப் பெண் ஒருவர் புத்தகமாக எழுதி இருந்ததைப் பார்த்த போது அதில் இஞ்சி ஒத்தடம் பற்றிய குறிப்பு இருந்தது தெரிய வந்திருக்கிறது.
அந்தக் குறிப்புகளை அவர் தனது தந்தைக்கு அனுப்பி வைத்தார். நான் அவருக்கு அந்த முறையில் தொடர்ந்து ஒன்றரை வருடங்களாக சிகிச்சையளித்து வந்த போது அவர் பூரண குணமடைந்து இன்றும் நலமோடு இருக்கிறார். எனவே இந்த அனுபவம், அறிவியல் பூர்வ உண்மையை இலவசமாக அனைவரும் தெரிந்து கொள்ள
ஹ்ர்ன் ற்ன்க்ஷங் ல பதிவு செய்தோம். சிறுநீரக நோயாளிகள் இஞ்சி ஒத்தடம் செய்வதுடன் உணவுக் கட்டுப்பாடோடும் இருந்தால் டயாலிசிஸ் செய்யத் தேவையில்லை.
கவலைப்படவோ,பயப்படவோ தேவையில்லை. இது அனுபவப் பூர்வமான உண்மை. இந்த முறையில் ஏராளமானோரை குணப்படுத்தி இருக்கிறோம்'' என்கிறார் சங்கர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...