பல்ப் உற்பத்தி நகரம்!
சாதாரண டியூப் லைட்டுகள் தொடர்ந்து எரிந்தால் அதிக நாட்கள் உழைக்காது. ஆனால் எல்.இ.டி.பல்புகள் தொடர்ந்து பல மணி நேரம் எரிந்தாலும் நீடித்து


சாதாரண டியூப் லைட்டுகள் தொடர்ந்து எரிந்தால் அதிக நாட்கள் உழைக்காது. ஆனால் எல்.இ.டி.பல்புகள் தொடர்ந்து பல மணி நேரம் எரிந்தாலும் நீடித்து உழைக்கக்கூடியவை. வெளிச்சமும் நன்றாக இருக்கும். அதனால்தான் அரசு அலுவலகங்களில் மின்சாரத்தை மிச்சம் செய்வதற்காக குண்டு பல்புகளை மாற்றி விட்டு எல்.இ.டி.பல்புகளை மாற்று மாறு அரசு கேட்டுக் கொண்டுள்ளது. மின்கட்டணச் செலவை வெகுவாகக் குறைக்க குழல் விளக்குகள் எனப்படும் சி.எப்.எல். மற்றும் எல்.இ.டி.பல்புகளின் தேவை அதிகமாகியிருக்கிறது.
ராமநாதபுரம் பாரதி நகரில் "நூருல்லைட்ஸ்' என்ற பெயரில் எல்.இ.டி.மற்றும் சி.எப்.எல். பல்புகளை உற்பத்தி செய்யும் நிறுவனத்தை நடத்தி வருகிறார் ஸாதியா பர்வீன். வீட்டில் இருக்கும் பெண்கள் தங்கள் வேலை நேரம் போக மற்ற நேரங்களில் மட்டும் வேலை செய்து மாதம் ரூ.10 ஆயிரம் வரை சம்பாதிப்பது எப்படி? என்று பயிற்சியளித்து வருகிறார். இவரை அவரது பல்ப் உற்பத்தி நிறுவனத்தில் சந்தித்து பேசினோம்:
"" என் கணவர் எஸ்.ஹக்கீம் கொடுத்த ஊக்கத்தின் காரணமாக நானும் ஒரு பல்ப் தயாரிப்பு நிறுவனத்தைத் தொடங்கி இன்று பல பெண்களுக்கும் எப்படி பல்புகள் தயாரிப்பது என்று கற்றுக் கொடுத்து வருகிறேன். தமிழகத்தில் உள்ள அத்தனை ஊராட்சிகளுக்கும் சேர்த்து மொத்தமாக 12லட்சம் எல்.இ.டி. மற்றும் சி.எப்.எல். பல்புகள் தேவைப்படுகின்றன. அதே போல தமிழகத்தில் பெரும்பாலான வீடுகளில் ஒரு சதவிகிதம் கூட மின்சாரத்தை மிச்சம் செய்யும் பல்புகள் இல்லை. இது குறித்து இப்போது ஓரளவு விழிப்புணர்வு வந்திருப்பதால் அரசு அலுவலகங்களிலும் எல்.இ.டி.பல்புகளைப் போடுமாறு அரசும் உத்தரவிட்டுள்ளது.
Light emitting diode என்பதன் சுருக்கமே எல்.இ.டி. எனப்படுகிறது.
கணவரால் கைவிடப்பட்ட பெண்கள், விதவைகள் மற்றும் ஆதரவற்ற பெண்களுக்குப் பயிற்சியில் முன்னுரிமை தருகிறோம். மீன்பிடித் தொழிலையும், நெசவுத் தொழிலையும் நம்பியே வாழ்க்கையை நகர்த்துகிற ஆண்களில் சிலரும் கேட்டுக் கொண்டதால் இப்போதும் ஆண்களுக்கும் இலவசமாகப் பயிற்சியளிக்கிறோம்.
இப் பயிற்சி பெற படிப்போ, வயதோ தேவையில்லை. ஆர்வமுள்ள யாரும் பயிற்சி பெறலாம். பயிற்சியின் போது மின்சாரம் என்றால் என்ன?அதன் பிரிவுகள் எவை? பாதுகாப்பாக இருப்பது எப்படி? இந்த பல்புகள் எவ்வாறு மின்சாரத்தைச் சேமிக்க உதவுகின்றன? என தகுந்த பயிற்சியாளர்கள் மூலமாக பயிற்சியளிக்கிறோம். பயிற்சியாளர்களுக்குத் தேவையான தயாரிப்பு பொருட்களைக் கொடுப்பதோடு ஒவ்வொருவருக்கும் பத்து லட்சம் மதிப்புள்ள காப்பீடும் செய்து கொடுக்கிறோம்.
பயிற்சி முடித்த பெண் ஒரு நாளைக்கு குறைந்த பட்சம் 50 பல்புகள் வீதம் ஒரு மாதத்துக்கு ஓராயிரம் பல்புகள் வரை தயாரித்து விட முடியும். ராமநாதபுரத்தைப் போல திண்டுக்கல்,தேனி,புதுக்கோட்டை உள்ளிட்ட மாவட்ட தலைநகரங்களிலும் பயிற்சி நிலையங்களை நிறுவியிருக்கிறோம். பல்புகளை தயாரிக்கவும், விற்பனை செய்யவும் என ஒரு தாலுகாவுக்கு இரு முகவர்களையும் நியமித்து வருகிறோம். பயிற்சி பெற விரும்பும் மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு அவர்களுக்குத் தேவைப்படும் இடத்திலேயே சிறப்பு பயிற்சிகளையும் நேரில் சென்று பயிற்சியளிக்கிறோம்.
ஊராட்சி அலுவலகங்களுக்கு கடைகளில் விற்பதை விட மூன்றில் ஒரு பங்கு விலையில் ஒரு வருட உத்தரவாதத்துடன் விலை குறைத்து தருகிறோம்.
பல ஊராட்சிகளில் தெரு விளக்குகளை எல்.இ.டி.பல்புகளாக மாற்றியதால் அந்த ஊராட்சிகளின் மின்கட்டணம் பாதியாகக் குறைந்துள்ளது.
எல்.இ.டி பல்புகள் பொருத்திய ஒரு சோலார் தெரு விளக்கு தொடர்ந்து 3 நாட்கள் மழை பெய்து கொண்டே இருந்தாலும் எரியும் சக்தி உடையது. ஐநஞ தரச்சான்றிதழும் பெற்றுள்ளோம். வீடுகளில் எல்.இ.டி.பல்புகளாக மாற்றிக் கொண்டால் மின்கட்டணம் 80 சதவிகிதம் மிச்சமாகி விடும்.
பனியன் உற்பத்தி நகரம் திருப்பூர் என்று சொல்கிற மாதிரி பல்ப் உற்பத்தி நகரம் ராமநாதபுரம் என்று சொல்ல வைப்போம்'' என்றார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...